"டமார்".. எடப்பாடி தப்பு செய்துட்டாரா..அந்த "தலை"யை காணோமே.. பாஜகவ விடுங்க.. ஓபிஎஸ்ஸூக்கு செம சான்ஸ்
சென்னை: கொங்குவில் சரிவை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி, தென்மண்டலங்களிலும் மேலும் அதிருப்தியை சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.. இது ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாகவும் அமைந்து வருகிறது.
அதிமுக விவகாரம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலமே, மெல்ல மெல்ல திமுக பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் எடப்பாடி பழனிசாமி, இடைத்தேர்தலில் மண்ணை கவ்வ நேர்ந்தது என்கிறார்கள்.
எனவே கொங்குவை சரிக்கட்ட வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது.. அதேசமயம், முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதில் போதுமான அளவுக்கு ஆர்வம் காட்டாமலேயே உள்ளதாக அதிருப்தி நிலவுகிறது.

முக்குலத்தோர்: கடந்த 2 வருட காலமாகவே, எடப்பாடி பழனிசாமி தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்லவில்லை.. ஏற்கனவே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், தேவர் ஜெயந்திக்கும் எடப்பாடி வராமல் போனது, தென்மண்டலத்தில் அதிருப்தியை கூட்டியது.. அதேபோல, மாயத்தேவருக்கும் எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை.. இதனால், பெரும்பாலான முக்குலத்தோர் சமுதாயமும் எடப்பாடி பழனிசாமி மீதான வருத்தத்தை பதிவு செய்தவாறே உள்ளனர்..
எப்போதுமே கொங்கு மண்டலத்துக்கு ஆதரவாக எடப்பாடி செயல்படுகிறார் என்ற இந்த ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துதான், மூத்த தலைவர் வைத்திலிங்கம் போன்றோர் எடப்பாடியிடமிருந்து பிரிந்து ஓபிஎஸ் பக்கம் சென்றார்கள். இப்போது ஓபிஎஸ்ஸுக்கு முழுபலமாக வைத்திலிங்கம் இருப்பதற்கு காரணமே எடப்பாடி மீதான அதிருப்திதான் என்பதை அதிமுக நன்கறியும்.. இப்படிப்பட்ட சூழலில், எம்பி தேர்தல் வரப் போகிறது..
தென்மண்டலத்தில் எடப்பாடிக்கு ஆதரவு போதுமானதாக இல்லை என்பதை டெல்லி மேலிடமும் நன்றாக அறிந்து வைத்துள்ளது.. அதனால்தான், டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸை இணைத்து கொள்ளும்படி நேற்றுகூட உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடியிடம் வலியுறுத்த வேண்டி வந்தது.. வழக்கம்போல் இந்த வேண்டுகோளுக்கு மறுப்பு சொல்லி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
பேச்சுவார்த்தை: அதேசமயம், டெல்லியில் கூட்டணி பேச்சுவார்த்தையை அமித்ஷாவுடன் நடத்த, தன்னுடன் கொங்கு மண்டல தலைவர்களை மட்டுமே உடன் அழைத்து சென்றுள்ளார்.. இதுதான் இப்போது முக்குலத்தோர் சமூகத்தினரிடையே மேலும் எரிச்சலை கூட்டி வருகிறது.. இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தொடர்ந்து முக்குலத்தோர் புறக்கணிக்கப்படுவதாக அந்த சமூகத்தினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி அதிகரித்து கொண்டிருககிறது..
ஆரம்பத்தில், ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தபோது, முக்குலத்தோர் சமூகத்தினரை ஆறுதல்படுத்தும் வகையில் எதிர்கட்சி துணை தலைவர் பதவியை, அந்த சமூகத்தில் செல்வாக்காக இருக்கக்கூடிய விஜயபாஸ்கருக்கு வழங்காமல், உதயகுமாருக்கு வழங்கியிருந்தார்.. ஆனாலும், போதுமான பலனை எடப்பாடிக்கு இது பெற்று தரவில்லை என்றே தெரிகிறது.

வன்னியர்கள்: டெல்லி சந்திப்பின்போது கூட, கவுண்டர், வன்னியர் சமூகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டிருந்த நிலையில், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் யாருமே அதில் இல்லை.. அதாவது, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். சீனியர் என்பதால் மீனவர் சமூகத்தை சேர்ந்த ஜெயக்குமாரை அழைத்து சென்றதாக தெரிகிறது..
இதில், முக்குலத்தோர் சமூகத்தில் செல்வாக்காக இருப்பவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். அவருக்கும் எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அதேபோல, உதயகுமார், செல்லூர் ராஜூ போன்றவர்களையும் அழைத்து செல்லவில்லை. கட்சியின் முழுமையான தலைவராகிவிட்ட பிறகும்கூட, இப்படியான புறக்கணிப்புகள் சலசலப்பை கூட்டி வருகிறது.
பெரிய தவறு: விரைவில் மதுரையில் மாநாடு கூட்ட போகிறார் என்றாலும், அது எந்த அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுக்கும் என்று இப்போதே பலர் கேள்வியை எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.. எடப்பாடியின் மிகப்பெரிய தவறாக இது பார்க்கப்பட்டும் வருகிறது.. இப்படி எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு தவறும்தான் ஓபிஎஸ்ஸுக்கு பலம் சேர்த்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தென்மண்டலத்தை புறக்கணிக்க புறக்கணிக்க, அதிமுகவுக்குள் ஓபிஎஸ்ஸை தவிர்க்க முடியாது என்றும், இதற்காகவே ஓபிஎஸ்ஸை பாஜக விட்டுவிடாது என்றும் சொல்கிறார்கள்.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
மாநாடு: இங்கு இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. கடந்த வாரம் ஓபிஎஸ் திருச்சியில் மாநாட்டை நடத்தியிருந்தார்.. அந்த மாநாட்டுக்கு வந்திருந்தவர்களில் 70 முதல் 80 சதவீதத்தினர், தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்தே வந்திருந்தார்கள்.. அத்துடன், ஒருசமூகத்துக்கு எதிராகவே எடப்பாடி பழனிசாமி, அரசியல் செய்து கொண்டிருப்பதாக, அவர்களில் பலர் பொருமினார்களாம்.. அதுமட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஆதரவை முழுமையாக பெற வேண்டுமானால், சசிகலா, தினகரனுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓபிஎஸ்ஸின் தற்போதைய திட்டமாக உள்ளதாம்..
ஏற்கனவே, டெல்லி மேலிட சப்போர்ட் இல்லாமல், ஓபிஎஸ்ஸால் இந்த அளவுக்கு அரசியல் செய்ய முடியாது என்ற சலசலப்புகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சசிகலா + தினகரனின் ஆதரவை முழுமையாக, இந்த மாநாட்டில் ஓபிஎஸ் பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.. அந்தவகையில், தென்மண்டல வாக்குகளை தன்பக்கம் திருப்ப வேண்டுமானால், எடப்பாடி பழனிசாமி நிறையவே வியூகங்களை வகுக்க வேண்டியிருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications