நாங்குநேரி சம்பவம்: ஒவ்வொரு நிமிஷமும் பயந்து கிட்டே வாழ முடியுமா? அதே ஊரின் முன்னாள் ஆசிரியை ஆவேசம்
நெல்லை: அந்த பையன் நல்லா படிச்சதும், ஒழுக்கமாகவும் அடங்கிய பையனுமாக இருந்தது எங்களது தப்பா? இல்லை நாங்க படிக்கவே கூடாதா? எப்படி இருக்க முடியும்.. எங்கே போய் வாழ முடியும் என்று நாங்குநேரி சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் ஊரை சேர்ந்த முன்னாள் ஆசிரியை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படித்து வந்த மாணவர் சின்னத்துரையை அவருடன் படித்த சக மாணவர்கள் சாதிய போக்குடன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் மாணவரின் தங்கையும் காயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னதுரைக்கும் அவரது தங்கைக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

நாங்குநேரி சம்பவத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அதே ஊரை சேர்ந்த முன்னாள் ஆசிரியை கூறிய தகவல் வருமாறு:- இந்த சம்பவம் ஒருநாளில் நடந்த விஷயம் கிடையாது. இந்த குழந்தைக்கு தொடர்ச்சியான மிரட்டல்கள், தனிப்பட்ட முறையில் துன்புறுத்தல்கள் இதுவெல்லாம் நடந்திருக்கிறது. ஆனால், இதுவரைக்கும் வெளியில் தெரியவில்லை. இதைப்பற்றி யாரும் வெளியில் பேசவில்லை. பேசினால் பெரும் பிரச்சினையாகும்.
சுற்றி வரை எல்லோருமே அவுங்க சமூகத்தை சேர்ந்த மக்களாக இருக்காங்க.. அந்த ஊர்களில் இருக்கும் ஒரு சமூக மக்கள் காலி பண்ணிட்டு போயிட்டாங்க... எங்க தெரு மட்டும் தான் அதில் பாக்கி இருக்கு... அதிலேயும் ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட முறையில் பிரச்சினை இருக்கும்... பேசினால் பிரச்சினை ஆகும் என்று எல்லோரும் மனதிற்குள்ளே வைத்துக் கொண்டு அடிமையாகவே உட்கார்ந்து விட்டார்கள்.
ஆனால், இந்த பிரச்சினை பெருசா வருவதற்கு காரணம் என்னவென்றால்.. இந்த பையன் 10 நாளா பள்ளிக்கூடம் போகவில்லை... ஏன் போகவில்லை என்று அவனும் சொல்லவில்லை... பெரியவர்களே சொல்ல மறுக்கிறார்கள்.. சின்ன குழந்தை எப்படி சொல்லும். பெற்றோரிடமும் சொல்லவில்லை. டீச்சர்களிடமும் சொல்லவில்லை. நண்பர்களும் யாரும் கிடையாது. அதற்காகவே ரொம்ப பயந்து போய், சென்னை போவதற்காக ரயில்வே ஸ்டேஷன் போய்விட்டான்.
குடும்பத்தில் உள்ள ஒரு பையன் இதை பார்த்துவிட்டு.. ஒரு ஆறு மாதம் படித்தால் காலேஜ்க்கு போயிடலாம் என்று கன்வின்ஸ் பண்ணி கூப்பிட்டு வந்து இருக்கிறார்கள். அடுத்த நாள் ஸ்கூல் டீச்சரிடம் பேச வைத்து இருக்கிறார்கள். அந்த பையனின் அம்மா மட்டும் ஸ்கூலுக்கு கூப்டு போயிருக்கிறார்கள். இந்த விஷயம் மற்றவங்களுக்கு எப்படி தகவல் தெரிஞ்சது என்று தெரியவில்லை.
அன்றைக்கு மாலையே.. அதே வகுப்பை சேர்ந்த இரண்டு மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவனிடம், நீ எப்படி எங்களை பற்றி சொல்லுவ.. என்று கேட்டு இருக்கிறார்கள். இதற்கு அந்த பையனோ.. வாயே திறக்காமல் அமைதியாக இருந்து இருக்கிறான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு பாட்டியும் சம்பந்தப்பட்ட பையனின் அண்ணனும், வந்து எதுவென்றாலும் எங்க கிட்ட சொல்ல வேண்டியதுதானே என்று சத்தம் போட்டுட்டு போயிருக்காங்க..
அவுங்க சத்தம் போட்டுட்டு போன கொஞ்ச நேரம் கழித்து அதாவது 9.30 மணிக்கு 3 பசங்க வந்து இருக்காங்க.. ரொம்ப சின்ன வீடு... கீழே உட்கார்ந்து சாப்பிட்டு இருந்து இருக்காங்க.. எழுந்திரிக்கக் கூட முடியாத அளவுக்கு வெட்டின இடத்திலேயே திருப்பி திருப்பி வெட்டியிருக்காங்க.. கைய வச்சே அந்த பையன் தடுத்து இருக்கான். அதனால் இரண்டு கைகளிலுமே முழங்கைக்கு கீழே பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த பையன் இதுவரை இருப்பதே தெய்வாதீனம் தான்..
தாக்குதல் நடத்திய பசங்க ஓடிப்போய்ட்டாங்க... இத்தனைக்கும் ஊருக்குள் நடுவில் இருக்கும் வீட்டில் படிக்கிற குழந்தைகளுக்கு இந்த நிலைமை., இந்த பிரச்சினை நடக்கவில்லை என்றால் இதைப்பற்றி யாருமே பேசியிருக்க மாட்டோம். இது வெளி உலகத்திற்கே வந்து இருக்காது. அத்தனை கிராமமும் அழிந்த மாதிரி எங்க கிராமும் அழிந்து இருக்கும். மனிதனின் வாழ்வுக்கு ஆதாரமே படிப்பு மட்டும் தான். அந்த பையன் நல்லா படிச்சதும், ஒழுக்கமாகவும் அடங்கிய பையனுமாக இருந்தது எங்களது தப்பா?
இல்லை நாங்க படிக்கவே கூடாதா? எப்படி இருக்க முடியும்.. எங்கே போய் வாழ முடியும். அவுங்களை தாண்டித்தான் நாங்க படிக்க போகனும்.. மருத்துவமனைக்கு போக முடியும். எல்லா இடத்திலேயும் அவுங்களை தாண்டித்தான் போகும் போது ஒவ்வொரு நிமிஷமும் உயிருக்கு பயந்துகிட்டு வாய்க்கு பூட்டு போட்டு வாழ முடியுமா? சுதந்திரம் வாங்கிட்டோம்.. வாங்கிடோம் என்று சொல்லுறாங்க... இந்த குழந்தைங்க என்னைக்கு வெளியில் வருவாங்க.. எதிர்கால சந்ததிகள் வாழ்வதற்கு தகுந்த ஊர்னு அதை சொல்லவே முடியாது" என்றார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications