தென்காசியில் கார் லாரி மோதி விபத்து.. ஜவுளி நிறுவன உரிமையாளர் பலி
நெல்லை: தென்காசியில் கார் லாரி மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் நெல்லையை சேர்ந்த பிரபல ஜவுளி நிறுவன உரிமையாளர் பலியடைந்து இருக்கிறார்.
நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, ஆகிய பகுதிகளில் அந்த பிரபல ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இதன் உரிமையாளர் செங்கோட்டையை சார்ந்த சுதன்.

இவர் கடிந்த 24ஆம் தேதி இரவு தென்காசியில் கடையை அடைத்து விட்டு அவர் இணைந்து இருக்கும் கிளப் மீட்டிங் முடித்துவிட்டு இரவு 11.30 மணியளவில் செங்கோட்டை வீடு நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது இலஞ்சி அருகிலுள்ள தனியார் நிறுவனம் அருகில் வரும் போது எதிரே வந்த சரக்கு லாரியில் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
காரின் முன்பக்கம் முழுமையாக லாரியின் முன் பகுதியில் சிக்கியது. இதில் கார் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது. காரை ஓட்டிய சுதன் உடல் நசுங்கி பலியானார்.
இது குறித்து குற்றாலம் போலீசார், தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்து விரைந்து வந்தனர். சுதனின் உடலை கைப்பற்றி தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications