திண்டுக்கல் அருகே காரும் லாரியும் மோதி விபத்து.. இருவர் உயிரிழப்பு
திண்டுக்கல் அருகே காரும் லாரியும் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காரும் லாரியும் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே இருக்கும் சித்தயன்கோட்டை பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. திண்டுக்கல் நோக்கி சென்ற வாகனம் எதிரே வந்த வாகனம் மீது வேகமாக மோதி இருக்கிறது.

இதில் காரில் பயணித்த இருவரும் மரணம் அடைந்துள்ளனர். காரில் சென்றவர்கள் குமார், கண்ணையா என அடையாளம் காணப்பட்டு இருக்கிறது.
லாரி ஓட்டுநர் காயங்களுடன் திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications