மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பலியாகிவிட்டனர்.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி இந்திராணி. இவர்களது மகள் மகாலட்சுமி. இவர்கள் திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர்.

தரிசனத்தை முடித்துக் கொண்ட அவர்கள் இன்று அதிகாலை காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மதுராந்தகம் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது.

இந்த விபத்தில் சுப்பிரமணி, இந்திராணி, மகாலட்சுமி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். அது போல் மேலும் காரில் பயணம் செய்த சாந்தியும் கார் ஓட்டுநரும் அந்த விபத்தில் உயிரிழந்தனர். விபத்து குறித்து படாளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications