நரபலி கொடுத்து அசால்டாக ஐந்தடியில் புதைத்த குற்றவாளிகள்... ஆய்வு செய்த அதிகாரி அதிர்ச்சி
மதுரை: பி.ஆர்.பி கிரானைட் குவாரிகள் செயல்படும் இடத்தின் அருகே நரபலி கொடுத்து புதைக்கப்பட்டிருந்த இரு சடலங்களும் ஐந்தரை அடி ஆழத்தில்தான் புதைக்கப்பட்டிருந்தன. இங்குவந்து யார் சடலத்தை அடையாளம் காணப் போகிறார்கள் என்ற மெத்தனத்தால் மேம்போக்காக சடலங்களைப் புதைத்திருக்கலாம் என சகாயம் குழுவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சந்தேகம் தெரிவித்துள்ளார். கிரானைட் முறைகேடு பற்றிய விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால் இனி பொதுமக்கள் யாரும் புகார் தரவேண்டாம் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள ரூ.16000 கோடி கிரானைட் முறைகேடுகள் பற்றி 10 மாதங்களாக விசாரணை மேற்கொண்டு வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், இறுதிக்கட்ட கள ஆய்வில் ஈடுபட்டுள்ளார். கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டது பற்றி சேவற்கொடியோன் என்பவர் அளித்த புகாரினை அடுத்து இ.மலம்பட்டி கிராமத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

கிரானைட் குவாரிகளின் அருகே சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் பரவியது உள்ளூர்வாசிகளிடையே மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. சடலங்கள் தோண்டியெடுக்கும் பணியை முழுமையாகக் கண்காணித்த சகாயம் குழுவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி வேலு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
காவித்துணி தேங்காய்
முதல் சடலத்துடன், காவித் துணியும், துணியில் சுற்றப்பட்ட முழுத் தேங்காயும் கிடைத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் மக்கள், சனிக்கிழமை இறந்தவர்களின் சடலத்துடன் தேங்காயை கட்டுவது வழக்கம். சனி பிணம் தனியே போகாது என்பதால், தேங்காய் அல்லது கோழிக்குஞ்சை உடன் புதைப்போம் என்றனர். அது மிகச்சரியாக தெற்கே தலை வைத்து புதைக்கப்பட்டிருந்தது.
அவசரத்தில் புதைப்பு
அடுத்ததாக கிடைத்த இரண்டு சடலங்களும், தென்மேற்குத் திசையில் தலை இருக்குமாறு புதைக்கப்பட்டுள்ளன. உள்ளூர்க்காரர்கள் எப்போதுமே மிகச்சரியாக தெற்கே தலை இருக்குமாறு தான் புதைப்பார்கள் என்பதால், இவை இரண்டும் அவசர கதியில் புதைக்கப்பட்டது போல தெரிகிறது.
ஐந்தரை அடி ஆழத்தில்
பொதுவாக கொலையை மறைக்க விரும்புகிறவர்கள், மிக ஆழமாகக் குழி தோண்டி தான் புதைப்பார்கள். ஆனால், சந்தேகத்துக்குரிய இரு சடலங்களும் ஐந்தரை அடி ஆழத்தில்தான் இருந்தன. இந்த இடத்தின் இருபுறமும் பிஆர்பியின் குவாரி உள்ளது. வெளிநபர்கள் யாரும் இங்கே வர முடியாது.
சடலங்கள் புதைப்பு
இங்குவந்து யார் சடலத்தை அடையாளம் காணப் போகிறார்கள் என்ற மெத்தனத்தால் மேம்போக்காக சடலங்களைப் புதைத்திருக்கலாம் என்று கருதுகிறேன். இவை எல்லாம் ஓய்வுபெற்ற அதிகாரி என்ற முறையில் நான் சொல்லும் தகவல்கள் தான். அதிகாரபூர்வமாக உங்களிடம் எதையும் நான் பதிவு செய்ய முடியாது என்றார்.
ஆண் குழந்தை சடலம்
நான்காவதாக சிக்கிய குழந்தையின் சடலத்தில் மண்டையோடு மட்டுமே எஞ்சியிருந்தது. அது நரபலி கொடுக்கப்பட்ட குழந்தையா? என்ற கேள்வி எழுந்தது. அப்போது தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூரைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர், "இது எங்கள் ஊரைச் சேர்ந்த செல்வி என்பவரது 7 மாத ஆண் குழந்தை. இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்தக் குழந்தை, மதுரை அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டது. ஆம்புலன்ஸில் நேரடியாக இங்கே கொண்டுவந்து புதைத்து விட்டோம்" என்று கூறவே குழந்தையின் சடலம் பற்றிய பரபரப்பு ஓய்ந்தது.
உள்ளூர்வாசிகளின் சுடுகாடு
சின்ன மலம்பட்டியில் சடலம் தோண்டி எடுக்கப்பட்ட இடம், வருவாய்த்துறை ஆவணங்களில் மணிமுத்தாறு என்று பதிவாகி உள்ளது. அந்த இடத்தை உள்ளூரைச் சேர்ந்த முத்தரையர் இனமக்கள் இடுகாடு மற்றும் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். அதனால், தோண்டும் பணி நடந்தபோது உள்ளூரைச் சேர்ந்த கருப்பையா (52) என்பவர் அருகில் தான் எனது தாயாரின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. அதை தோண்டிவிடாதீர்கள் என்று கெஞ்சினார். தோண்டமாட்டோம் என்று அதிகாரிகள் உறுதியளித்தாலும், ஓரமாக நின்று அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
உயிர்பலி கேட்கும்
நம்முடைய உறவினர்கள் உடலையும் தோண்டி எடுத்துவிடுவார்களோ என்று அஞ்சிய உள்ளூர் மக்கள் பலரும் தோண்டும் பணியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். 5 மணிக்கு மேல் போலீஸாரை முற்றுகையிட்ட உள்ளூர்வாசிகள், சுடுகாட்டில் தோண்டிய குழியை அப்படியே விட்டுச் செல்லக்கூடாது என்றும், அவ்வாறு விட்டுச் சென்றால், உயிர்ப்பலி கேட்கும் என்றும் கூறினர். தோண்டிய இடத்தில் பிரண்டை கொடியை வேட்டியில் சுற்றி உள்ளே புதைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்ததை போலீஸார் ஒப்புக்கொள்ளவே பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
புகார் தர வேண்டாம்
இதனிடையே கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கிரானைட் முறைகேடுகள் தொடர்பான விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. எனவே இனிமேல் கிரானைட் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் எந்த புகார்களும் அளிக்க வேண்டாம் என தனது அறிக்கையில் சகாயம் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications