மிரட்டிய "வர்தா" புயலால் காற்றில் பறக்கும் கார்கள் - வீடியோ

வர்தா புயலால் சென்னையில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் சாலைகளில் முறிந்து கிடக்கின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வர்தா புயல் சென்னை அருகே கரையைக் கடந்தது. புயலால் பலத்த காற்று வீசியதில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டன.

வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே இன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் கரையைக் கடந்தது. புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

 cars flying in cyclone

சென்னையில் கனமழை பெய்வதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்த போது சுமார் 100 கி.மீ முதல் 130 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் சூறைகாற்றால் தூக்கி வீசப்பட்டன.

பலத்த காற்றால் ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் வேறுடன் முறிந்து விழுந்தது. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இதனிடையே சூறைக் காற்றால் சென்னை டிஎல்எப் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் காற்றில் பறந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+