குமுதம் வரதராஜனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
சென்னை: குமுதம் பத்திரிகை வெளியீட்டாளர் என் வரதராஜனுக்கு எதிரான வழக்கு ஆதாரமில்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது சென்னை பெருநகர தலைமை நடுவர் நீதிமன்றம்.
குமுதம் பத்திரிகையின் அதிகபட்ச பங்குதாரர் மற்றும் இயக்குநருமான ஏ.ஜவஹர் பழனியப்பன் 2010-ஆம் ஆண்டு போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அதில், "1947-ஆம் ஆண்டு எனது தந்தை எஸ்.ஏ.பி. அண்ணாமலையால் தொடங்கப்பட்ட வாரப் பத்திரிகையை நான் நடத்தி வருகிறேன். பத்திரிகை தொடங்கப்பட்ட போது பி.வி.பார்த்தசாரதி என்பவர் எனது தந்தையுடன் மேலாளராக பணிபுரிந்தார்.
பிறகு அவர் வெளியீட்டாளராக பதவி உயர்த்தப்பட்டார். பார்த்தசாரதி இறந்த பிறகு, அவரது மகன் பி.வரதராஜன், தனது குடும்பத்துக்கு சில பங்குகள் ஒதுக்க வேண்டும் என என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அவருக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவ்வாறு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கான மதிப்பை வரதராஜன் இப்போது வரை செலுத்தவில்லை.
பிறகு, குமுதம் பத்திரிகை அலுவலகத்துக்கு நான் வராத நிலையில், அனைத்து பொறுப்புகளையும் நிர்வகிப்பதற்கான வாய்ப்பு வரதராஜனுக்குக் கிடைத்தது. அப்போது, நிர்வாகத்தில் இருந்த வரதராஜன் மோசடியில் ஈடுபட்டார். அலுவலக நிதி ரூ. 25 கோடியை தவறாகப் பயன்படுத்தினார்," என்று புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் பேரில் வரதராஜன் மீது மோசடி மற்றும் ஏமாற்றுதல் பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வரதராஜனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதன் பிறகு சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஏ.ஜவஹர் பழனியப்பன் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி சரியான முறையில் ஆய்வு செய்யவில்லை. 2011-ஆம் ஆண்டு என்னிடமும் எனது குடும்பத்தினரிடமும் விசாரணை செய்தார். அதன் பிறகு, புகாரில் உண்மை இல்லை எனக் கூறி வழக்கை திடீரென முடித்துவிட்டார். விசாரணையை சரியான முறையில் நடத்தவில்லை. அதனால், விசாரணை அதிகாரியின் இறுதி ஆய்வறிக்கையை நிராகரிக்க வேண்டும்," என கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "நிறுவனத்தின் பணம் ரூ. 25 கோடியை தவறாக பயன்படுத்தியதாகவும், ஏமாற்றியதாகவும் வரதராஜனுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை.
புகாருக்குத் தேவையான அனுமதிக்கக் கூடிய ஆதாரங்கள், ஆவணங்கள் ஏதும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால் வரதராஜனுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது," என்று கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications