கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிடுவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக, வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் மோசடி செய்து மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தற்போது, மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருவதால், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று கடந்த மாதம் 21ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
எனவே, என்னுடைய கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications