ஏற்காடு: வாக்காளர்களுக்கு பணம் திமுக நிர்வாகி கைது; ஏ.வ.வேலு மீது கொலை மிரட்டல் வழக்கு

ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 4ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக - திமுக இடையே நேரடியாக போட்டி நிலவுகிறது. வாக்காளர்களை கவர போட்டி போட்டிக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணம், பொருள் என அன்பளிப்பு கொடுப்பதை தவிர்க்க தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் பல இடங்களில் பணம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காரிப்பட்டி காவல்நிலைய எல்லைக்குற்பட்ட சின்னாகவுண்டாபுரம் செட்டியார் வட்டம் பகுதியில் அதிகாலை முதல் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.

திமுகவைச்சேர்ந்தவர்கள் ஒரு லிஸ்டை கையில் வைத்துக்கொண்டு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அதிமுக ஆதரவாளர்கள் என மூன்றாக பிரித்து 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணம் கொடுத்து வந்துள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தேசிங்கு ஆகியோர் தலைமையில் சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச்சேர்ந்த கணேசன் மகன் சேகர் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும்போது அம்மாபேரவை இணைச்செயலாளர் மெடிக்கல் ராஜா தலைமையில் உள்ள நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்து காரிப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் தங்கராஜிடம் ஒப்படைத்தார். அவரிடம் இருந்த 22,500 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
இதே காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு மீது கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.காரிப்பட்டி பகுதியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்ட்டா முத்து தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தி.மு.க முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, ஈரோடு இறைவன், கரூர் முரளி உள்ளிட்ட தி.மு.க பிரமுகர்கள் வேலுமணியின் காரை வழிமறித்து கொலை மிரட்டல் விட்டதாக தெரிகிறது. இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வேலுமணி காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு உள்ளிட்ட தி.மு.க.வினர் மீது கொலை மிரட்டல் விடுத்தது உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications