மீறப்பட்ட “ரூல்ஸ்”.. மண்ணோடு மண்ணான சென்னை மண்ணடி கட்டிடம்! உரிமையாளர் மீது 5 பிரிவுகளில் வழக்கு
சென்னை: அனுமதியின்றி மண்ணடியில் உள்ள பழமையான 4 மாடி கட்டிடத்தை இடிக்கும்போது விபத்து ஏற்பட்ட நிலையில், அதன் உரிமையாளர் பரத் சந்திரன் என்பவர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை மண்ணடியில் அரண்மனைக்காரன் வீதியில் பரத் சந்திரன் என்பவருக்கு சொந்தமான பழமையான 4 மாடிக் கட்டிடம் அமைந்து இருக்கிறது. 60 ஆண்டுகள் பழமையான கட்டிடமாக இதை இன்று காலை புனரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் திடீரென கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அத்துடன் கட்டிடத்தின் சுவர்களும் இடிந்து விழுந்தன.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெரும் சத்தத்துடன் காலை 10:30 மணியளவில் ஏற்பட்ட இந்த கட்டிட விபத்தில் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கட்டிடம் அமைந்த இடத்தை சுற்றிலும் கற்களும், புழுதியுமாக காணப்பட்டது. உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டிடம் அமைந்து இருக்கும் அரண்மனைக்காரன் வீதி என்பது குறுகலான பாதையை கொண்டது என்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை அடையாறு மற்றும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிந்து விழுந்த கட்டிடத்தில் 4 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், உள்ளே யாரும் இல்லை என்றும், 2 பேர் மட்டும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
தகலறிந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு மீட்புப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து பேசிய தீயணைப்பு துறை டிஜிபி, மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டிட சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
கட்டிட உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் கட்டிடம் இடிந்த மண்ணடி பகுதிக்கு சென்ற தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மீட்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு "சென்னை மாநகராட்சி, காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புபடை மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 30 லாரிகளின் மூலமாக கட்டிட இடிபாடுகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன.இன்னும் 3 மணி நேரத்தில் முழுமையாக கட்டிட கழிவுகள் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சொல்லி இருக்கிறார். 2 பேர் காயமடைந்து உள்ளார்கள். கட்டிட இடிபாடுகளில் 4 பேர் சிக்கி இருப்பதாக கூறப்படுவது வதந்தி." என்றார்.
இந்த நிலையில் கட்டிடத்தின் உரிமையாளர் பரத் சந்திரன் என்பவர் மீது 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவித்தல், கவனக்குறைவாக செயல்படுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications