தாசில்தார் தலையில் பணத்தைக் கொட்டிய பாமக வேட்பாளர் மீது 6 பிரிவுகளில் வழக்கு!
விழுப்புரம்: தாசில்தார் தலையில் பணத்தைக் கொட்டிய விவகாரம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை பாமக வேட்பாளர் பாலு உட்பட 47 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதியில் அதிமுகவினரும், திமுகவினரும் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதாக பாமக வேட்பாளர் பாலு தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தனிடம் புகார் அளித்திருந்தார்.

அவரது புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாலு 20க்கும் மேற்பட்ட பெண் வாக்காளர்களுடன் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்திற்கு நேற்று சென்றார். அங்கு முகுந்தன் இல்லாததால் தாசில்தார் ராஜேந்திரனை சந்தித்த பாலு இது தொடர்பாக புகார் தெரிவித்தார்.
அப்போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், தனது கைகளில் இருந்த பணத்தை தாசில்தாரின் தலையில் கொட்டினார் பாலு. மேலும் சில நோட்டுகளையும் அவர் மீது வீசினார்.
அவர் கொட்டிய ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் பெண் வாக்காளர்களுக்கு அதிமுக, திமுக வழங்கிய பணம் எனத் தெரிவித்த பாலு, பணப் பட்டுவாடாவை நிறுத்தாவிட்டால் பெண் வாக்காளர்களை ஒன்று திரட்டி போராடப் போவதாகவும், உளுந்தூர்பேட்டையில் தேர்தலை நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்றும் கூறி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் பாலு உட்பட 47 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலு மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் தேமுதிக சார்பில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications