பணம் போதுமானதாக இருக்கிறதா? வரிசையில் நின்றவர்களிடம் கேட்ட திருநாவுக்கரசர்
பணம் பெறுவதற்காக ஏடிஎம் வாசலில் நின்றவர்களிடம்பணம் போதுமானதாக உள்ளதா என திருநாவுக்கரசர் கேட்டறிந்தார்.
மதுரை: மதுரையில் ஏடிஎம்களில் பணம் பெறுவதற்காக வரிசையில் நின்றவர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குறைகளை கேட்டறிந்தார்.
கடந்த 8ஆம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய 500 மற்றும 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய மோடி அரசு பழைய செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தது.

பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவிப்பால் நாடு முழுவதும் கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் பணம் பெறுவதற்காக ஏடிஎம் வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில் தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது.
இதற்காக மதுரை சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அங்குள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்காக நின்றவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஏடிஎம்களில் கிடைக்கும் பணம் போதுமானதாக உள்ளதா? எவ்வளவு நேரமா நிற்கிறீர்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்று கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications