Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உளுந்தூர்பேட்டையில் வானில் பெய்த பண மழை.. ரூ.100 நோட்டை அள்ளி கொட்டிய கள்ளக்குறிச்சி திமுக பிரபலம்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாக்கள் பல இடங்களில் எதிர்பாராத சம்பவங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் வழக்கமாக நடக்கும் இந்த திருவிழா இம்முறை மோதலில் முடிந்தது.. அதேபோல் வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் எதிர்பாராத சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன.. அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!

மயான கொள்ளை என்பது மாசி மாத சிவராத்திரிக்கு மறுநாள் அங்காளம்மன் கோவில்களில் நடைபெறும் ஒரு சிறப்பு வழிபாடாகும்..

Cash Shower at Ulundurpet Kallakurichi

மக்கள் சுடுகாட்டிற்கு சென்று அங்குள்ள மண்ணால் உருவங்களை செய்து, தானியங்கள் மற்றும் பலி பொருட்களை இறைவனுக்கு படைத்து சூறையாடி வழிபடுவார்கள்.. தீய சக்திகள் அழிந்து நன்மைகள் பெருக வேண்டும் என்பதற்காக இந்த வினோத திருவிழா கொண்டாடப்படுகிறது..

ராமதாஸ் வீட்டு பகுதி

அப்படித்தான் நேற்றைய தினமும் தமிழகம் முழுக்க இந்த மயான கொள்ளை கொண்டாடப்பட்டது.. இதில் சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தன..

குறிப்பாக, திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் ஊர்வலம் பாமக நிறுவனர் ராமதாஸ் வீடு வழியாக சென்றபோது அரசியல் கட்சிகளுக்கு இடையே கொடி காட்டுவதில் போட்டி ஏற்பட்டது..

கடந்த முறை ஏற்பட்ட மோதல் காரணமாக இம்முறை கட்சி கொடிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.. ஆனால் அந்த தடையை மீறி சிலர் கொடிகளுடன் ஆட்டம் பாட்டமாக வந்தனர்.. ராமதாஸ் வீட்டுக்கு பக்கத்திலேயே பாமகவினர் மேளதாளத்துடன் ஆடியபடி வந்துள்ளனர்..

இதை பார்த்த போலீசார் அவர்களை ஊர்வலத்தை முடித்து செல்லுமாறு சொல்லி உள்ளனர்.. அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் தடியடியாக மாறியது.. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.. இந்த தடியடியில் பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.. இதனால் ராமதாஸ் வீட்டு அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது..

வேலூர் பரபரப்பு

இதேபோல் வேலூரில் நடந்த மயான கொள்ளை திருவிழா பெரும் விபத்தில் முடிந்தது.. வேலூர் கழிஞ்சூர் மற்றும் விருதம்பட்டு பகுதிகளில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் பாலாற்றை நோக்கி கொண்டு வரப்பட்டன..

அப்போது கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேர் பாலாற்றில் இழுத்து வரப்பட்டபோது திடீரென ஒருபக்கமாக சாய்ந்து கவிழ்ந்தது..

இந்த விபத்தில் தேருக்கு அடியில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்தனர்.. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி தேரை மீட்டு அடியில் சிக்கியவர்களை மீட்டனர்.. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது..

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது..

கள்ளக்குறிச்சி சம்பவம்

உளுந்தூர்பேட்டை உள்பேட்டை ஸ்ரீ அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சாமி வீதி உலா நடைபெற்றது.. கடந்த 10 நாட்களாக நடந்த இந்த விழாவில் நேற்று சாமி மயானத்திற்கு சென்றுள்ளது..

அப்போது அங்கு வந்த திமுக கவுன்சிலர் ஒருவர் தன் கையிலிருந்த 100 ரூபாய் நோட்டுகளை திடீரென வானத்தை நோக்கி வாரி எறிந்திருக்கிறார்..

தன்னிடமிருந்த 100 ரூபாய் நோட்டுகளை சாமிக்கு மேலாகவும், பிறகு மக்கள் கூட்டத்தை நோக்கியும் வாரி வீசியிருக்கிறார்.. கவுன்சிலர் என்ன வீசுகிறார் என்பது புரியாமல் நின்ற மக்களுக்கு, பிறகுதான் அது பணம் என்று தெரியவந்தது..

உளுந்தூர்பேட்டை பண மழை

விழாவில், பணமழை பொழிந்ததை பார்த்த பக்தர்கள் சாமி கும்பிடுவதை விட்டுவிட்டு பணத்தை பிடிப்பதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு போட்டி போட்டுள்ளனர். இதனால் அந்த இடத்தில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு உண்டானது.. இது வீடியோவாகவும் வெளியாகிய நிலையில், அது பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது..

பக்தி பரவசத்துடன் நடக்க வேண்டிய கோவில் திருவிழாவில் இப்படி பணத்தை வீசி சர்ச்சையை ஏற்படுத்திய கவுன்சிலரின் செயல் குறித்து பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்..

ரூ.100 திமுக கவுன்சிலர்

இந்த பணமழை வீடியோ இணையதளங்களில் காட்டுத்தீயாக பரவி அரசியல் வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.. சாமி கும்பிட வந்த இடத்தில் இப்படிப்பட்ட செயல்கள் தேவையா என மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.. மொத்தத்தில் நேற்று நடந்த இந்த திருவிழாக்கள் பலருக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்துள்ளன..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+