926 மார்க் வாங்கியும் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் மாணவன்!
செங்கோட்டை: பிளஸ்டூவில் 926 மார்க் வாங்கியும் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கிறார் ஒரு ஏழை மாணவர்.
ஒருமாணவன் நல்ல மதிப்பெண் பெற்றும் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் நிலை இருந்தால் ஓன்று பணமில்லாமல் வறுமையின் கொடுமையால் மட்டுமே இருக்க முடியும். ஆனால் இந்த இனத்தில் பிறந்து அந்த இனத்தினை சார்ந்தவர் இவர் என்று அடையாளப்படுத்தும் ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் ஒரு இனமே கல்வியறிவை மேம்படுத்த முடியாமல் இளமை திருமணத்தை நாடி செல்வதும் சாலைகளில் கிடக்கும் குப்பைகளையும், கழிவுகளையும் பொறுக்கி ஜீவனத்தை கழிக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டு சாக்கடைக்கருகே குடியிருக்கும் வேதனைக்கும் அவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

தென்காசி அருகேயிருக்கும் செங்கோட்டை பகுதியில் சுமார் 75 ஆண்டுகாலமாக வசித்து வருபவர்கள் "காட்டுநாயக்கன்" சமுதாயத்தினர். இம்மக்களுக்கு குடியிருக்க வீடு கிடையாது. ஆனால் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உண்டு. ஆனால் ஜாதி சான்று கிடையாது.
இந்த சமுதாய மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தாலும் இந்த சமுதாய குழந்தைகள் 10ஆம் வகுப்புக்கு மேல் படித்தாலும் வீண். காரணம் ஜாதி சான்று இவர்களுக்கு அரசால் வழங்கப்படுவதில்லை. இது குறித்து இம்மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தும், அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு போராட்டங்களை நடத்தியும், சென்னையில் ஊர்வலமாக சென்று மனுக் கொடுத்தும் இன்றுவரை இவர்களுக்கு ஜாதி சான்று கிடைத்தப்பாடில்லை.
இந்தாண்டு நடந்த பனிரெண்டாம் வகுப்புத்தேர்வில் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் மாணவன் சுடலை என்பவர் 926 மதிப்பெண்கள் பெற்றும் ஜாதி சான்று இல்லாததால் கல்லூரியில் சேரமுடியாமல் தவித்து வருகிறார். இவரது கல்வி குரல் அரசின் செவிகளுக்கு எட்டுமா.. ?
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications