எங்க பார்த்தாலும் இட்லி.. அத்தனையும் மல்லிப்பூ மாதிரி...!!
சென்னை: சென்னையில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான வகைகளில் வித்தியாசமான இட்லிகளைக் கொண்டு நடத்தப்பட்ட கண்காட்சியை பொதுமக்கள் பெரிதும் ரசித்தனர்,
ஆரோக்கியமான காலை உணவாக, குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிட தகுந்த உணவு என பலப் பெருமைகளைத் தன்னகத்தே கொண்டது இட்லி. முன்பெல்லாம் பண்டிகையின் முக்கியச் சிறப்பாக இட்லி இடம் பிடித்திருந்தது. ஆனால், இன்று இட்லி பலருக்கு சலித்துப் போய் விட்டது எனலாம்.
எனவே, மீண்டும் மக்களுக்கு இட்லி மீதான காதலை அதிகரிக்கும் வகையில் சென்னையில் இட்லி கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது.

மல்லிப்பூ இட்லி..
வியாசர்பாடியில் மல்லிப்பூ இட்லிக் கடை சார்பில் இந்த புதுமையான இட்லிக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பல வண்ணங்களில், பல வடிவங்களில் வைக்கப்பட்டிருந்த இட்லிகளை பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

விதவிதமான வடிவங்கள்...
நட்சத்திரம், ஆங்கில எழுத்துகள், பழங்கள் உள்ளிட்ட பல வடிவங்களில், வெவ்வேறு வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட ஆயிரம் வகையான இட்லிகள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்தக் கண்காட்சியை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், ஞானப்பிரகாசம் ஆகியோர் திறந்துவைத்தனர்.

மகிழ்ச்சி....
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நீதியரசர் வள்ளிநாயகம், ‘‘இட்லியில் புதுமை என்பது வரவேற்கத்தக்க விஷயம். வட இந்தியர்கள்கூட இன்றைக்கு இட்லியைத்தான் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இதுபோன்ற முயற்சிகளை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.

இட்லியில் புதுமைகள்...
கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த மு.இனியவன் கூறும்போது, ‘‘இட்லி தயாரிப்பில் பல புதுமைகளை புகுத்தினோம். இளநீர் இட்லி, பைன் ஆப்பிள் இட்லி மற்றும் 10 கிலோ, 30 கிலோ, 124 கிலோ என மெகா சைஸ் இட்லிகளை தயாரித்துள்ளோம்.

குழந்தைகளை கவரும்...
இப்போது ஆயிரம் வகையான இட்லிகள் கண்காட்சியை நடத்தியுள்ளோம். வெவ்வேறு வடிவத்தில் செய்யப்பட்ட இட்லி, குழந்தைகளை வெகுவாக கவரும்" எனத் தெரிவித்தார்.

எதிர்பார்த்ததை விட அதிகம்...
வித்தியாசமான இந்தக் கண்காட்சியில் எதிர்பார்த்ததை விட, 1000க்கும் அதிகமான இட்லி வகைகள் தயார் செய்யப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப் பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications