காவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்.. தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் அதிகளவில் வருவதால் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் அதிகளவில் வருவதால் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது 1.55 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று 2.50 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் அதிகளவில் வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல்,கரூர், திருச்சி, தஞ்சை,நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்துக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளுக்கு மத்திய நீர்வள ஆணையம் 4வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
வெள்ளம் குறித்து மத்திய நீர்வளத்துறை ஆணையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications