சென்னையில் இருந்து வழக்கம் போல் இயங்கிய கர்நாடக அரசுப் பேருந்துகள் #cauvery
சென்னை: சென்னையில் இருந்து கர்நாடக அரசு பேருந்துகள் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் இயங்கின.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநிலத்தில் போராட்டம் நடந்து வருவதால் தமிழகத்தில் இருந்து அங்கு செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து கர்நாடகாவுக்கு கிளம்பிய கர்நாடக அரசு பேருந்துகள் நேற்று வழக்கம் போன்று இயக்கப்பட்டன. கோயம்பேட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடகாவுக்கு சென்ற தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூரோடு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில்,
சென்னை கோயம்பேட்டில் இருந்து பெங்களூர், மைசூர், பெல்லாரி, கோலார், தர்மசாலா உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி கோயம்பேட்டில் இருந்து கிளம்பிய கர்நாடக அரசுப் பேருந்துகள் எந்த பிரச்சனையும் இன்றி இயக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா-தமிழக எல்லையில் போராட்டம் நடந்து வரும் நிலையிலும் எங்களின் பேருந்துகள் வழக்கம் போன்று இயங்குகின்றன. செய்திகளை பார்த்து மக்கள் கர்நாடகாவுக்கு செல்ல தயங்குகிறார்கள். அதனால் பேருந்துகளில் கூட்டம் இல்லை.
கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக டிக்கெட் முன்பதிவு மையம் மற்றும் எங்கள் பேருந்துகள் நிற்கும் இடம் ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications