ரூ. 824 கோடி மோசடி செய்த கனிஷ்க் உரிமையாளர்கள் சென்னையில் கைது!
14 வங்கிகளை ஏமாற்றி கடன் பெற்ற கனிஷ்க் நிறுவன உரிமையாளர்கள் பூபேஷ் குமார் ஜெயின் மற்றும் நீதா ஜெயின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை : பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் உள்பட 14 வங்கிகளில் மோசடி செய்து ரூ. 824 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் கனிஷ்க் நிறுகூன உரிமையாளர்கள் பூபேஷ்குமார் ஜெயின் மற்றும் நீதா ஜெயின் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போலியான ஆவணங்கள் மற்றும் தங்க நகை இருப்பு காட்டி 14 வங்கிகளிடம் ரூ. 824 கோடி மோசடியாக கடன் பெற்ற கனஷ்க் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நேற்றைய தினம் சிபிஐ துணை இயக்குனருக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மற்றும் அவரது மனைவி நீதா ஜெயின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

நேற்று இரவு அவர்களின் சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் சோதனை நடந்த நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த பூபேஷ் குமார் மற்றும் நீதா ஜெயினை சிபிஐ கைது செய்து விசாரணைக்காக டெல்லி அழைத்து சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications