177 கிலோ தங்கம்: போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியிடம் 5-வது நாளாக விசாரணை!
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 5-வது நாளாக இந்த விசாரணை தொடருகிறது.
சென்னை: போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டியிடம் 5-வது நாளாக கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் பல்லாயிரம் கோடி ரூபாய் கான்டிராக்ட் பணிகளை செய்து வருகிறார் சேகர் ரெட்டி. சேகர் ரெட்டிக்கு சொந்தமான வீடு, அலுலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் ரொக்கமாக ரூ190 கோடி, ரகசிய அறைகளில் பதுக்கப்பட்ட 177 கிலோ தங்கம் சிக்கியது. இதில் ரூ100 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேகர் ரெட்டி மீது அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேகர் ரெட்டியிடம் தொடர்ந்து 5-வது நாளாக வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட உள்ளார்.
சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்னம் மற்றும் புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications