For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.379 கோடி மோசடி- நாதெள்ளா உரிமையாளர்கள் மீது சிபிஐ வழக்கு

ரூ. 379 கோடி மோசடி செய்ததாக நாதெள்ளா உரிமையாளர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: பாரத ஸ்டேட் வங்கி உள்பட 3 வங்கிகளில் ரூ. 379 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக நாதெள்ளா உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பிரபல நகைக்கடையான நாதெள்ளா ஜுவல்லர்ஸ் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.250 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக அந்த வங்கி சார்பில் சிபிஐ-க்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

CBI files case against Nathella Jewellery owners for bank fraudulent

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி உள்பட 3 வங்கிகளில் அந்த நிறுவனம் கடன் பெற்றுரூ.379 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மேலாண் இயக்குநர் ரங்கநாத் குப்தா, இயக்குநர்கள் பிரசன்னகுமார், பிரபன்ன குமார் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

விசாரணையில் 2010 முதல் இந்த நிறுவனம் போலியான ஆவணங்களை அளித்து கடன் வாங்கியது தெரியவந்தது. பாரத ஸ்டேட் வங்கி அளித்த புகாரின்பேரில் சிபிஐயின் வங்கி மோசடி தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுபோல் சென்னை உஸ்மான் சாலையில் உள்ள கனிஷ்க் தங்க நகை நிறுவனமும் ரூ. 824 கோடியை 14 வங்கிகளில் கடனாக பெற்றுவிட்டு ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

English summary
As the Nathella Jewellery owners have done fraudulent in bank by getting debt for RS. 379 crores, CBI files case against them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X