காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை நிச்சயம்: இல.கணேசன் நம்பிக்கை
மயிலாடுதுறை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட, தமிழகத்தில் உடனடியாக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதன் தொடர்ச்சியாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழிகாட்டும் நெறிமுறைகளின்படியே பின்பற்றுவோம் எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மத்திய அரசு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படை பிரச்சனைகளான குடிநீர் பிரச்சனை, வீடுகள் தோறும் சுகாதாரமான கழிப்பிடங்களை உருவாக்குவதையே முதன்மையான அம்சமாக கருதுகின்றது.
இந்த அம்சத்தை குஜராத்தில் செயலாக்கம் செய்துள்ளது போல், நாடு முழுவதும் இதனை செயல்படுத்த மோடி தலைமையிலான மத்திய அரசு ஆர்வம் காட்டுகின்றது.
தமிழகத்தை பொருத்தவரை காவிரி நதி மட்டுமே நீர் ஆதாரமாக உள்ளது. தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து, தமிழகத்தில் உடனடியாக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அறிக்கையை சமர்பித்துள்ளார். இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழிகாட்டும் நெறிமுறைகளின்படியே பின்பற்றுவோம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த கருத்தின் அடிப்படையில் பார்த்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என உறுதியாக நம்பலாம்.
பா.ஜனதா கட்சியின் தேசியப் பொதுக்குழு உறுப்பினரும், மயிலாடுதுறையை சேர்ந்த வக்கீலுமான கே.ராஜேந்திரன் கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்ததையடுத்து, தமிழக அரசும் ரூ.117 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளது. இவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கவேண்டும்.
தமிழகத்தின் நீர் பற்றாக்குறையை போக்குவதற்கு தமிழக நீர்நிலைகள் சீர் செய்யப்படவேண்டும். மழை காலங்களில் வெள்ளநீர் வீணாக சென்று கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுப்படவேண்டும். தமிழக நீர் ஆதார பிரச்சனைக்கு ஒரு இதுவும் தீர்வாக அமையும்.
இவை எல்லாவற்றிற்க்கும் மேலாக முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் காலத்தில் தென்னக நதிகளை இணைக்க திட்டம் தீட்டப்பட்டது. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மகாநதி கோதாவரி, கிருஷ்ணா நதி போன்ற தென்னந்திய நதிகளை இணைக்கப்பட்டால் தமிழகத்தில் நீர் பற்றாக்குறையே இருக்காது. இவையை காவிரி நதிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகவும் அமையும்.'
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இப்பேட்டியின் போது பா.ஜனதா தேசியப்பொதுக் குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன், மாநிலத்துணைத் தலைவர் கோவி.சேதுராமன், நாகை மாவட்டப் பொதுச் செயலாளர் நாஞ்சில்.பாலு, நகர செயலாளர் முட்டம்.செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications