ரயில் நிலையங்களில் செயல்படாத கேமராக்கள்- சென்ட்ரல் குண்டு வெடிப்பு விசாரணை பின்னடைவு
சென்னை: பெங்களூர்-சென்னை சென்ட்ரல் இடையிலான சில ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத நிலையில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஸ்வாதி என்ற பெண் இன்ஜினீயர் உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர்.

தனிப்படை போலீஸார்...
இச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். குண்டு வெடிப்பு நடப்பதற்கு சிறிது நேரம் முன்பாக நபர் ஒருவர், குண்டு வெடித்த பெட்டிக்கு முந்தைய பெட்டியிலிருந்து அவசரமாக இறங்கி செல்லும் ரகசிய கேமராவில் பதிரான காட்சியை போலீசார் வெளியிட்டனர். சென்னையில் பதிவான அந்த நபரின் உருவம், பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவிலும் பதிவாகியிருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து அந்த நபரைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தெளிவாக இல்லா காட்சிகள்...
இருப்பினும் பெங்களூருவில் பதிவான காட்சிகள் தெளிவாக இல்லாததால் இரண்டு இடங்களிலும் பதிவாகியிருப்பது ஒரே நபர்தானா என்ற குழப்பம் எழுந்துள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே குண்டுகள் வெடித்த பெட்டிகளில் (எஸ் 4ல் இருக்கை எண்.70, எஸ் 5ல் இருக்கை எண்.28) 2 பேர் போலி முகவரி கொடுத்து தட்கல் டிக்கெட் எடுத்து பயணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

தத்கலில் 2 டிக்கெட்டுகளும் முன்பதிவு...
70ம் எண் இருக்கை அகமது உசேன் என்பவரின் பெயரிலும், 28ம் எண் இருக்கை ஜான்சன் என்பவரின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் ரயில் நிலையத்தில் கடந்த 29 ஆம் தேதி அன்று, காலை 10.07 மணிக்கு தத்கலில் 2 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
அகமது உசேன் என்ற பெயரில் மேற்குவங்க மாநிலம், மால்டா வரை செல்வதற்கும், ஜான்சன் பெயரில் குவாஹாட்டி வரை செல்வதற்கும் போலியான ஆவணங்களை கொடுத்து தத்கல் டிக்கெட்டை எடுத்துள்ளனர்.
ஜான்சன் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் தொலைபேசி எண் எதுவும் இல்லை.

செல்பேசி "சுவிட்ச் ஆப்'...
அகமது உசேன் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் செல்பேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணை போலீஸார் ஆய்வு செய்தபோது கடந்த ஒரு மாதமாக அந்த செல்பேசி "சுவிட்ச் ஆப்' செய்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே இவர்கள் 2 பேரும் குண்டு வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் பெங்களூரில் இருந்து குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட பின்னர், எங்கு இறங்கினார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை.
பெங்களூரிலிருந்து புறப்பட்ட அந்த ரயில், பெங்களூரு கன்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

கேமராக்கள் பொருத்தப்படவில்லை....
இந்த ரயில் நிலையங்கள் சிலவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. கேமராக்கள் பொருத்தப்பட்ட ரயில் நிலையங்களிலும் அவை சரிவர வேலை செய்யவில்லை என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். இதனால், குண்டு வெடிப்பு குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக செயல்பட்டிருந்தால், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்ளைக் கண்டுபிடிக்கத் தேவையான தெளிவான ஆதாரங்கள் கிடைத்திருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications