சமையல் கியாஸ் மானியம் ரத்து அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: சமையல் கியாஸ் மானியம் ரத்து அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நம் நாட்டில் 16.35 கோடி பேர் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் சுமார் 58 லட்சம் பேர் மானியத்துடன் கூடிய சிலிண்டர்களை பெறுவதை நிறுத்திக்கொண்டனர். இதன் மூலம் மத்திய அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் மானியத் தொகை மேலும் மிச்சமானது.

இந்த நிலையில், வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறுபவர்கள், வரும் ஜனவரி மாதம் முதல் மானிய விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் பெற முடியாது என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய பா.ஜ.க அரசு மறுபரிசீலனை செய்து ஏற்கனவே நடைமுறையில் இருந்த மானியத்துடன் கூடிய கியாஸ் சிலிண்டர்களை அனைவரும் பெற்று பயன்பெற வழி வகுக்க வேண்டும்.
மேலும், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு வெகுவாகக் குறைந்துள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் கியாஸ் சிலிண்டர்களின் விலையை குறைத்து கொடுப்பதற்கும் மத்திய பா.ஜ.க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் வாசன் கூறியுள்ளார்.
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications