சிங்கப்பூர் குடிமகன் என கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் தந்த தினகரனின் இந்திய குடியுரிமை ரத்தாகுமா?
தெலுங்கானா எம்.எல்.ஏ.வின் குடியுரிமை பறிப்பு போல தம்மை சிங்கப்பூர் குடிமகன் என கூறிய தினகரனின் இந்திய குடியுரிமை ரத்தாகுமா? என கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: ஜெர்மன் பாஸ்போர்ட் வைத்திருந்ததால் தெலுங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் நான் இந்திய குடிமகனே இல்லை என்று நீதிமன்றத்திலேயே மனுத்தாக்கல் செய்து வாதிட்ட டிடிவி தினகரனின் இந்திய குடியுரிமையையும் மத்திய அரசு செய்யுமோ? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ. ரமேஷ், ஜெர்மன் குடியுரிமை பெற்றவர்; போலி ஆவணங்கள் மூலம் இந்திய குடியுரிமை பெற்றுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் ஆதிநிவாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையில், எம்.எல்.ஏ. ரமேஷ் ஜெர்மன் பாஸ்போர்ட் வைத்துள்ளார். அவர் போலி ஆவணங்கள் மூலமாகவே இந்திய குடியுரிமை பெற்றிருக்கிறார். ஆகையால் அவரது இந்திய குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது என அதிரடியாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
தெலுங்கானா எம்.எல்.ஏ. ரமேஷ் தம்மை போலி ஆவணம் மூலம் இந்திய குடிமகன் என்று கூறியவர். ஆனால் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலராக இருக்கும் டிடிவி தினகரனோ, நான் இந்திய குடிமகனே இல்லை. நான் சிங்கப்பூர் குடிமகன் என பெரா வழக்கில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து வாதிட்டவர். அதேநேரத்தில் தேர்தல் ஆணையத்திலோ நான் இந்திய குடிமகன் என கூறி தேர்தல்களில் போட்டியிட்டும் வருகிறார்.
இந்த குழப்பத்துக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. தினகரனின் ஒப்புதல் வாக்குமூலப்படி சிங்கப்பூர் குடிமகன் எனில் அவரது இந்திய குடியுரிமையும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் தினகரனுக்கு எதிராக இந்த ஆயுதத்தையும் டெல்லி பயன்படுத்தினாலும் ஆச்சரியமில்லைதான்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications