For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலால் வரி குறைப்பு எதிரொலி.... இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா?

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததையடுத்து பெட்ரோல், டீசலின் விலை ரூ.2.60 காசுகள் வரை குறைந்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    கலால் வரி குறைப்பு எதிரொலி.. பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா?-வீடியோ

    சென்னை : பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைந்ததன் எதிரொலியாக சென்னையில் பெட்ரோல், டீசலின் விலை ரூ. 2.60 காசுகள் வரை குறைந்துள்ளது.

    ஜூலை மாதம் தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதனையடுத்து படிப்படியாக உயர்வு நிலையிலேயே பெட்ரோல், டீசல் விலை இருந்தது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கொஞ்சம் கொஞ்சமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து ரூ. 73.48 எட்டிவிட்டது பெட்ரோல் விலை, இதே போன்று டீசல் விலையும் ரூ. 62.30 ஐ எட்டிவிட்டது.

    மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தையடுத்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ. 2 குறைப்பதாக நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

     அரசுக்கு வருவாய் இழப்பு

    அரசுக்கு வருவாய் இழப்பு

    உற்பத்தி வரி(கலால் வரி) குறைப்பு காரணமாக அரசுக்கு ரூ. 26 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் எஞ்சியுள்ள 6 மாத காலத்துக்கான இழப்பு ரூ. 13 ஆயிரம் கோடியாக இருக்கும்.

     சர்வதேச சந்தை விலை அடிப்படையில்

    சர்வதேச சந்தை விலை அடிப்படையில்

    உற்பத்தி விலை குறைக்கப்பட்டாலும், சர்வதேச சந்தை விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முடிவை திரும்பப் பெறப் போவதில்லை என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் மூலம் வசூலாகும் உற்பத்தி வரியில் 42 சதவீதம் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

     மதிப்பு கூட்டு வரி விகிதம்

    மதிப்பு கூட்டு வரி விகிதம்

    மத்திய அரசின் உற்பத்தி வரி தவிர்த்து மாநில அரசுகள் பெட்ரோலுக்கு 25 முதல் 40 சதவீதம் வரை வரி வசூலிக்கிறது. இதே போன்று டீசலுக்கு 15 முதல் 25 சதவீதம் வரையிலும் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது.

     விலையில் எதிரொலி

    விலையில் எதிரொலி

    இதனிடையே கலால் வரி குறைப்பு எதிரொலியாக பெட்ரோல் விலை சென்னையில் நேற்றைய விலையை விட ரூ. 2.63 குறைந்துள்ளது. நேற்று 73.48 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று ரூ. 70.85 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று டீசலின் விலை நேற்று லிட்டர் ரூ. 62.30 ல் இருந்தது இன்று ரூ. 2.41 குறைந்து ரூ. 59.89க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    English summary
    Centre's announcement to reduce excise duty for Petrol and diesel reflects today's rate as Petrol reduced Rs.2.63 and Diesel reduced Rs. 2.41 per litre.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X