போயஸ் கார்டனில் விவேக் நடத்திய 'ரகசிய கூட்டம்' இதற்குதானாம்!
போயஸ் கார்டனில் விவேக் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் பங்களாவில் விவேக் திடீரென ஒரு ரகசிய கூட்டத்தை கூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் பேச்சுவார்த்தைக்கு தீவிரம் காட்டின. ஆனால் இந்த பேச்சுவார்த்தையே நடக்காமல் போய்விட்டது.
இதற்கு மிக முக்கிய காரணமே ஜெயா டிவியும் நமது எம்ஜிஆர் நாளேடும்தான். இந்த இரண்டும் விவேக் வசம் உள்ளது. அதனால் சசிகலா, தினகரன் புகழ்பாடுவதிலேயே குறியாக இருக்கின்றன ஜெயாடிவியும் நமது எம்ஜிஆரும்.

ஓபிஎஸ் தரப்பு கோபம்
இதனால் சசிகலா குடும்பத்தையே ஒதுக்கி வைக்க வேண்டும் என்கிற ஓபிஎஸ் தரப்பு உச்சகட்ட கோபம் கொண்டது. அதேநேரத்தில் மத்திய பாஜக அரசையும் ஜெயா டிவியும் நமது எம்ஜிஆரும் கடுமையாக விமர்சித்தது.

மிரட்டிய டெல்லி
இதனால் டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அப்போதுதான் 2 மாதத்தில் ரூ380 கோடி கல்லா கட்டிய விவகாரத்தை சுட்டிக்காட்டியது டெல்லி.

எடப்பாடி அட்வைஸ்
இதையடுத்து மத்திய அரசை விமர்சிக்காமல் இருங்க.. என விவேக்குக்கு கடும் அட்வைஸ் கொடுத்திருக்கிறார் எடப்பாடியார். இந்த உத்தரவை மீறினால் நீங்களும் தினகரன் போல சிக்குவீங்க எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ரகசிய கூட்டம்
இதன்பின்னர்தான் ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆர் நாளேடு நிர்வாகிகளை போயஸ் கார்டன் பங்களாவுக்கு அழைத்திருக்கிறார் விவேக். தமக்கு இருக்கும் நெருக்கடியை சுட்டிக்காட்டி அடக்கி வாசிக்கலாம் என முடிவு செய்தார்களாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications