சூப்பர்.. சாதித்த விசிக.. பட்டியலின மக்களின் வீதியில் நுழைந்த திருத்தேர்.. துள்ளிகுதித்த திருப்போரூர்
திருப்போரூர் முருகன் கோயில் தேரோட்டம் பட்டியல் சமூக மக்கள் வீதிகளின் வழியாக சென்றது
செங்கல்பட்டு: திருப்போரூர் முருகன் கோயில் தேர் உற்சவம் நூற்றாண்டுகளுக்கு பின்னர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து அப்பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் வசிக்கும் வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மக்கள் தேர் உற்சவத்தை பட்டாசு வெடித்து, தேங்காய் உடைத்து வழிபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் அமைந்துள்ளது கந்தசுவாமி திருக்கோயில். இந்த கோயில் சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. குறைந்த காலங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக இருந்தாலும், இந்த புதிய கட்டிடத்திற்கு முன்னர் ஏற்கெனவே இங்கு பழைய கோயில் ஒன்று இருந்திருக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து போரிட்ட மூன்று இடங்களில் திருப்போரூரும் ஒன்று என தல வரலாறு குறிப்பிடுகிறது.
தொல்லியல் துறை வரலாற்றின்படி 17ம் நூற்றாண்டில் ஆதீனம் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் இந்த கோயிலை மறுசீரமைப்பு செய்ததாக தெரிய வருகிறது. மேலும் இப்பணியை இவருக்கு அடுத்து வந்த ஆதீனங்கள் விரிவுபடுத்தினர். அதன்படி புதிய குளம் அமைத்தல், கோயில் கட்டுதல் என பல திருப்பணிகளை இந்த பகுதியை சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் மேற்கொண்டுள்ளனர். அதேபோல கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் கோயிலுக்கு தினமும் விளக்கேற்றி, தூய்மை பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

வலியுறுத்தல்
இதற்காக இவர்களுக்கு கோயில் சார்பில் மானியமும் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல கோயில் பிரம்மோற்சவ விழாவிற்கு முன்னதாக கிராம காவல் தெய்வமான முண்டச்சி அம்மன் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து முதல் மரியாதை பெற்ற பின்னர்தான் கோயில் பிரம்மோற்சவ விழா நடைபெறும். ஆனால் இந்த வழக்கம் கடந்த இரு ஆதினங்கள் காலத்தில் கைவிடப்பட்டுள்ளது. எனவே தேர் உற்சவம் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் படவேட்டம்மன் வீதிகள் வழியாக செல்வது தடை செய்யப்பட்டது. இதனையடுத்து இப்பகுதி மக்கள் மீண்டு தேர் உற்சவம் தங்கள் தெருக்களில் வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விசிக
அதேபோல மேற்குறிப்பிட்ட தகவல்களை விரிவாக குறிப்பிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாரதி சமரன் சில நாட்களுக்கு முன்னர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் உயர்நீதிமன்றத்திலும் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதி வழியாக தேர் உற்சவம் நடைபெற வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். மறுபுறம் கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் கோயிலின் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. விரைவில் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

உயர்நீதிமன்றம்
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர் உற்சவம் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் படவேட்டம்மன் வீதி வழியாக கொண்டு செல்லப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பட்டியல் சமூக மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதேபோல நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து நேற்று திருப்போரூர் முருகன் கோயில் தேர் உற்சவம் படவேட்டம்மன் தெரு வழியாக வந்து சென்றது. ஏறத்தாழ நூற்றாண்டுகளுக்கு பின்னர் தேர் உற்சவம் தங்களது தெருக்களில் வருவதை பார்த்த மக்கள் பட்டாசு வெடித்து, நூற்றுக்கணக்கான தேங்காய் உடைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கடவுளை வழிபட்டனர்.

தேரோட்டம்
அதேபோல தேர் உற்சவத்திற்கு 300க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் நண்பகலில் நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனையடுத்து இன்று தீர்த்தவாரியும் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. மேலும் வரும் 9ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications