ஆட்டோவில் வந்த பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் 10 பவுன் செயின் கொள்ளை - கைவரிசையை காட்டிய திருடர்கள்!
சென்னை: சென்னையில் ஆட்டோவில் வந்த பெண் சப் இன்ஸ்பெக்டரிடமே செயினை அறுத்துச் சென்ற திருடர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அசோக் நகர் ராம கிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் அனிதா.இவர் பாதுகாப்பு பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் இன்று காலையில் ஆட்டோவில் வந்து வீட்டு முன்பு இறங்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளிலில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் அனிதா கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்து சென்றனர்.
இதேபோன்று குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், சாய்நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவர் வீட்டு வசதி வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஊருக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி திருப்பதி வேலைக்கு சென்று விட்டார். அவரது மகன் மனோஜ் பள்ளிக்கு சென்று விட்டான். மனோஜ் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டுக் கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் பீரோவில் எதுவும் இல்லை என்பதால் கொள்ளை எதுவும் போகவில்லை. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications