காவிரி டெல்டா மாவட்டங்களில்
காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று 3-வது நாளாக மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், பாபநாசம், பூதலூர், திருவையாறு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், சுவாமிமலை, அதிராம்பட்டினம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்றும் தூறல் மழை பெய்து வருகிறது.
நேற்று பெய்த மழை காரணமாக கும்பகோணம் அருகே உள்ள ஜெந்நாத பெருமாள் கோவில் கோபுரத்தில் உள்ள யாழி இடிந்து விழுந்தது.

திருவாரூர் - நாகை
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்றும் மேகமூட்டமாக உள்ளது. திருவாரூர், குடவாசல், முத்துப்பேட்டை, நன்னிலம், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய இடங்களில் இன்று 3-வது நாளாக தூறல் மழை பெய்து வருகிறது.
நாகை மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், கீழையூர், சிக்கல், திருமருகல், திட்டச்சேரி, தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய இடங்களில் இன்றும் தூறல் மழை பெய்து வருகிறது.
சீர்காழியில் நேற்று காலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கொள்ளிடம், பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு, திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய இடங்களில் நேற்று இரவு மழை பெய்தது. தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சீர்காழி பகுதியில் இன்றும் தூறல் மழை பெய்து வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications