மீண்டும் சென்னையில் மழை... வட கடலோரங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாழ்வுப் பகுதி அப்படியே நீடிப்பதாலும், வலுப்பெற வாய்ப்பில்லை என்பதாலும் இன்று வடகடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையத் தகவல்கள் கூறுகையில், இலங்கை, அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதியில், வெள்ளிக்கிழமை குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இந்தத் தாழ்வுப் பகுதியானது, தற்போது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

மேலும், வட கிழக்குப் பருவமழை, வட கடலோர தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, வட கடலோர தமிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழையும், தமிழகத்தின் மற்றப் பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும், நகரின் ஒரு சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், வடக்கு, வடமேற்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என எச்சரிக்கப்ட்டுள்ளது.
சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் லேசான தூறல் மழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை முதலே சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல், நாகை, விழுப்புரம் மற்றும் மதுரை உள்ளிட்ட பல பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications