தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது! குமரியில் பரவலாக மழை!!
சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு கட்டியம் கூறுவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக இன்று மழை பெய்து வருகிறது.
தமிழகத்தை கடந்த வாரம் வாட்டி வதைத்த கத்தரி முடிந்தது. ஆனபோதும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது.
இதுவரை மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 7-ஐ தாண்டியுள்ளது. பல மாவட்டங்களில் பலத்த பயிர் சேதாரத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 8 செ.மீ. மழையும், வேலூரியில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

பரவலாக மழை...
இதேபோல் நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட உட்புற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து உள்ளது.

தென்மேற்குப் பருவமழை...
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாகவும், இதனால் கேரளாவில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு அறிவித்தது.

தொடங்கியது
இதன்படி இன்று காலை முதலே கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பொதுப்பணித்துறை மற்றும் வானிலை துறையினர் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறி இது என்று அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சாரல் மழை...
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லையையொட்டி உள்ள மாவட்டங்களிலும் மழை கிடைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications