வெப்பச்சலனம்... தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்யலாம்... சென்னைக்கு மேகமூட்டம் தான்!
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்தரி முடிந்த பிறகும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது.

இந்நிலையில், இன்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில், மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், புதுக்கோட்டையில் 50 மில்லி மீட்டர் மழையும், திருவள்ளூர் மாவட்டம் திருவேலங்காடு, பள்ளிப்பட்டு, பூவிருந்தமல்லி, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், வேலூர் ஆகிய பகுதிகளில் 40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications