தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆராய்ச்சி மையம்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சனிக்கிழமையன்று தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது.

காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் 9 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இதேபோல், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி, ஈரோடு மாவட்டம் தளவாடி ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 7 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, போளூர், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, பள்ளிப்பட்டு, வேலூர் மாவட்டம் ஆலங்காயம், காவேரிப்பாக்கம், திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
இந்நிலையில் வெப்பச்சலனம் நீடித்து வருகின்ற காரணத்தினால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications