ம.தேமுதிக சந்திரகுமார், பார்த்திபன், சேகர், ரவீந்தரனுக்கு திமுகவில் பதவிகள் அறிவிப்பு #dmk
சென்னை: திமுகவில் இணைந்த மக்கள் தேமுதிக கட்சியின் நிர்வாகிகள் விசி சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன், சி.ஹெச். சேகர், கான்ஸ்டன்டைன் ரவீந்தரன் ஆகியோருக்கு திமுகவில் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டசபை தேர்தலின் போது தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிகவில் இருந்து வெளியேறி மக்கள் தேமுதிக உருவாக்கப்பட்டது.

பின்னர் மக்கள் தேமுதிக, திமுகவில் ஐக்கியமானது. தேமுதிகவின் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால் 3 பேரும் தேர்தலில் தோல்வி அடைந்தனர்.
இந்த நிலையில் திமுகவில் இணைந்த தேமுதிகவின் நிர்வாகிகள் பலருக்கும் இன்று பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திமுக கொள்கை பரப்பு இணைச் செயலராக விசி சந்திரகுமார், தேர்தல் பணிக்குழு செயலராக மேட்டூர் எஸ்.ஆர். பார்த்திபன், தீர்மானக் குழு உறுப்பினர்களாக சி.ஹெச். சேகர், செஞ்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளனர்.
விஜயகாந்துக்கு அறிக்கை எழுதிக் கொடுத்த பேராசிரியர் கான்ஸடன்டைன் ரவீந்தரன், திமுக செய்தி தொடர்பு இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் திமுக விவசாய அணிச் செயலராக அப்துல் காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications