”இதற்காகத்தான் திமுகவில் சேர்ந்துள்ளோம்” - காரணம் சொல்கிறார் மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார்!
சென்னை: தேமுதிகவில் இருந்து பிரிந்து நாங்கள் ஆரம்பித்துள்ள ம.தே.மு.தி.க என்னும் மக்கள் தேமுதிகவிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே திமுகவில் சேர்ந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்ததால் அதிருப்தி அடைந்த எம்எல்ஏ சந்திரகுமார், பார்த்திபன் உள்ளிட்ட அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் சிலர் விஜயகாந்த்திற்கு எதிராக வெளிவந்தனர்.

இதைத் தொடர்ந்து சந்திரகுமார், இரண்டு எம்எல்ஏக்கள் உள்பட 4 மாவட்டச் செயலாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து சந்திரகுமார் கடந்த 10 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இணைந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், "சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் போட்டியிடும் எண்ணத்தில் திமுகவை ஆதரிக்கவில்லை. திமுகவுடன் மக்கள் தேமுதிக இணைந்து போட்டியிடுவதன் அவசியம் குறித்து ஸ்டாலினுடன் பேசினோம். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கருணாநிதியிடம் பேசி தெரிவிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்கள் தேமுதிகவிற்கு அங்கீகாரம் வேண்டும் என்பதாலேயே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளோம். விஜயகாந்தை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கட்சியின் செயல்பாடுகளை கொண்டே தேமுதிக யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிந்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications