ஜெயலலிதா சிலையை மாற்றுவதற்கு முன்னால், அமைச்சர்களை மாற்றனும்.. டி. ராஜேந்தர் ஆவேசம்
Recommended Video

திருச்சி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் செய்யும் முன்னால், அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்று லட்சிய தி.மு.க கட்சியின் தலைவரும், நடிகருமான, டி.ராஜேந்தர் காட்டமாக தெரிவித்தார்.
லட்சிய தி.முக. தலைவர் டி.ராஜேந்தர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வரும் 28ம் தேதி, எனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான முடிவை அறிவிக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், திருச்சியில் டி.ராஜேந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:

வந்து பார்க்கட்டும்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவரவருக்கு ஆயிரம் கனவுகள் உள்ளது. அதனால்தான், இந்த அரசியல் வரவு உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசியல் என்பது சாதாரண விஷயமல்ல. அது மிகவும் கஷ்டமானது. அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையை மாற்றுவதற்கு முன்பாக, அவருக்கு இப்படி ஒரு சிலையை அமைத்த இந்த ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் நிலையை மாற்ற வேண்டும்.

பினாமி ஆட்சி
ஜெயலலிதாவின் உருவம், உள்ளம், கம்பீரத்தை மறந்து அமைக்கப்பட்டுள்ள அந்த சிலையை பார்க்கவே வேதனையாக உள்ளது. இதை வைத்து பார்த்தாலே, தற்போது நடப்பது 'அம்மா ஆட்சி' இல்லை என்பது தெரிகிறது. இரட்டை இலை இருந்தும் ஆர்.கே.நகரில் தோல்வியடைந்தது இந்த ஆட்சியாளர்களால்தான். ஜெயலலிதா உருவாக்கி தந்த ஆட்சி தற்போது பினாமி ஆட்சியாக நடந்து வருகிறது. காவிரி பிரச்சனைக்காக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திற்கு எனது லட்சிய தி.மு.க.விற்கு அழைப்பில்லை. கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அனைத்து கட்சி கூட்டங்களில் லட்சிய தி.மு.க. பங்கேற்றது.

எனது ஆதரவு இல்லை
ஆனால் ஆர்.கே.நகர் பிரசாரத்திற்கு நான் செல்லவில்லை என்பதற்காக எனக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை. மக்களுக்கே இந்த ஆட்சி மீது நம்பிக்கையில்லை. இவர்கள் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை. மற்றவர்களுக்கு பல்லாக்கு தூக்கும் இந்த ஆட்சிக்கு நான் எப்படிங்க ஆதரவு கொடுக்க முடியும் என்றார்.

ஸ்ரீதேவிக்கு அஞ்சலி
மேலும், தமிழகத்தில் உதித்து இந்தியா முழுவதும் மின்னிய நடிகை ஸ்ரீதேவி மரணம் இந்திய திரையுலகிற்கே பேரிழப்பாகும். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications