ரஷ்ய மருத்துவ கல்லூரியில் சேர்த்து விடுவதாகக் கூறி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் கோவை போலீசில் புகார் !

Subscribe to Oneindia Tamil

கோவை: ரஷிய மருத்துவ கல்லூரியில் சேர்த்து விடுவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ரஷிய மருத்துவ கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cheating case against private consultancy

இதனையடுத்து அந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தை சேர்ந்த எஸ்தர் அனிதா, அவருடைய கணவர் காமராஜ், உள்ளிட்ட 5 பேர் மீது மாநகர குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

இந்நிலையில் கடந்தாண்டும் தனியார் நிறுவனத்தால் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதால் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+