முக்கொம்பு மேலணையில் மேலும் சில மதகுகள் உடையும் ஆபத்து.. தலைமை பொறியாளர் ஆய்வு.. போலீசார் குவிப்பு
திருச்சி முக்கொம்பு மேலணையில் மேலும் சில மதகுகள் உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது,
Recommended Video

திருச்சி: முக்கொம்பு மேலணையில் மேலும் சில மதகுகள் உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கிருந்து 2 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் இந்த அணையில் உள்ள 6-ம் எண்ணில் இருந்து 13-ம் எண் மதகு வரை உள்ள 9 மதகுகள் மற்றும் 4 தூண்கள் திடீரென இடிந்தன. இதனால் அணைக்கட்டும், பாலத்தின் மேல் பகுதியும் அப்படியே ஆற்றுக்குள் இடிந்து விழுந்தன.

பாலம் துண்டிப்பு
தூண்கள் இடிந்து விழுந்ததால் பாலம் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் கரூர் சாலை பகுதியில் இருந்து திருச்சி-சேலம் சாலை வாத்தலை பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அடித்து செல்லப்பட்ட மதகுகள்
முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உள்ள மதகுகளின் வழியாக நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்துக்கு நீர் திறக்கப்படும் 9 மதகுகள் மற்றும் 4 தூண்கள் உடைந்து நேற்றிரவு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

தண்ணீர் நிறுத்தம்
இடிந்து விழுந்த மதகுகளின் வழியாக மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்ற மதகுகளில் தண்ணீர் திறந்து விடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது.

மக்களுக்கு எச்சரிக்கை
முக்கொம்பு காவிரி ஆற்றில் ஓடும் அதிக தண்ணீரால் மேலணையில் உள்ள 9 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உடையும் ஆபத்து
அப்பகுதியில் போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில்
திருச்சி முக்கொம்பு மேலணையில் மேலும் சில மதகுகள் உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை ஆய்வு
இதைத்தொடர்ந்து மதகுகள் உடைப்பு பற்றி பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் முக்கொம்பு மேலணை பகுதியில் நேரில் ஆய்வு செய்து வருகிறார். காவிரிக்கு திறக்கப்படும் 35வது மதகும் உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் மதகுகள் உடைப்பால் எந்த ஆபத்தும் இல்லை எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தலைமை பொறியாளர்கள் செந்தில் குமார், செல்வராஜ் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications