பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் மறுப்பு.. ஜேசிபி கண்ணாடியை உடைத்த வழக்கில் மனு தள்ளுபடி
செங்கல்பட்டு: பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டுக்கு அருகே பாஜக கொடிக்கம்பம் அகற்றும்போது ஏற்பட்ட பிரச்சனையில் ஜேசிபி கண்ணாடியை உடைத்ததாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவருக்கு ஜாமீன் மறுத்து அதற்கான மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டுக்கு அருகே பாஜக கொடிக்கம்பம் நட்டு வைக்கப்பட்டது. இந்த கொடிக்கம்பத்துக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து நள்ளிரவில் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் அந்த கொடிக் கம்பத்தை அகற்ற சென்றனர். இதுபற்றி அறிந்த பாஜக நிர்வாகிகள் அங்கு ஒன்றாக கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வேளையில் பாஜகவினர் ஜேசிபி வாகனத்தின் மீது கல் வீசினர். இதில் ஜேசிபியின் கண்ணாடி சேதமடைந்தது. இதையடுத்து பாஜகவினர் மீது கானாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு பாஜகவின் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை உடைத்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்ககோரி அமர்பிரசாத் ரெட்டி சார்பில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 30ம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அதன்பிறகு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று அவரது ஜாமீன் மனு மீது செங்கல்பட்டு நீதிமன்றம் மீண்டும் விசாரணையை தொடங்கியது. அப்போது அமர்பிரசாத் ரெட்டி சார்பில் வழக்கறிஞர்கள், ‛‛இந்த வழக்கு என்பது 2 அல்லது 3 நாட்களில் பிணை தரக்கூடிய குற்றம் தான். அதோடு ஏராளமானவர்கள் கூடியிருந்த இடத்தில் அமர்பிரசாத் ரெட்டி தான் கல்லை வீசினாரா என்ற கேள்வி எழுகிறது.
தற்போது அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இந்த வாதத்தை கேட்ட நீதிமன்ற நீதிபதி அதனை ஏற்கவில்லை. இதையடுத்து அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான்












Click it and Unblock the Notifications