22 ஆண்டுகளாக இயங்கி வந்த செங்கல்பட்டு சிறப்பு முகாம் மூடப்பட்டது
சென்னை: செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமை தமிழக அரசு மூடியுள்ளது. அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தோரில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் செய்யாறு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தமிழக அரசின் சிறப்பு அகதிகள் முகாம் செயல்பட்டு வந்தது. இதில் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் வந்த வெளி நாட்டினர் மற்றும் கடத்தல் வழக்கில் சிக்கிய இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டு இருந்தனர்.
இங்கு 7 நைஜீரியர்கள் உள்பட 41 பேர் அடைக்கப்பட்டு முகாமில் இருந்தனர். விசாரணை கைதிகளாக இருந்து வந்த இலங்கை தமிழர்கள் தங்களை விடுவிக்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் புதியதாக சிறப்பு முகாம் கட்டப்பட்டது. இது செயல்பாட்டுக்கு வந்ததால் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகள் செய்யாறு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
மொத்தம் உள்ள 41 கைதிகளில் 30 பேர் செய்யாறு முகாமுக்கு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை தமிழர்களான விக்ரமசிங்கா, காந்தி மோகன், ராமச்சந்திரன், ராஜ்குமார், கதிரேசன், சசீதரன், ஜெயவர்தனா, ரவிச்சந்திரன், காளிதாஸ், நித்யானந்தன், தனசேகரன் ஆகிய 11 பேர் திறந்தவெளி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 நைஜிரியர்கள் இன்று விடுதலையாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து 1993-ம் ஆண்டு முதல் 22 ஆண்டுகளாக இயங்கி வந்த சிறப்பு முகாம் மூடப்பட்டது. இதனை மீண்டும் மாவட்ட சிறைச்சாலையாக மாற்ற திட்டமிட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications