ஓட்டை உடைசல் ஈயம் பித்தளைக்கு சென்னை “ஏர்போர்ட்” - 45வது முறையாக "டமால்"!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 45வது முறையாக நேற்று பிற்பகலில் கண்ணாடி கதவு உடைந்து விழுந்து நொறுங்கியது. இதில், விமான நிலைய ஒப்பந்த ஊழியர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் விமான ஊழியர்கள், பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையம் ரூபாய் 2015 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீன முறையில் கட்டப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இதன் திறப்பு விழா நடந்தது. ஆனாலும், 2013 ஏப்ரலில் உள்நாட்டு முனையமும், அதே ஆண்டு செப்டம்பரில் சர்வதேச முனையத்தின் புறப்பாடு பகுதியும் செயல்பாட்டுக்கு வந்தன. சர்வதேச முனையத்தில் வருகை பகுதி இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் மாறி, மாறி தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகின்றன. கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள், மேற்கூரைகள், சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள சலவை கற்கள் பெயர்ந்து விழுவது போன்ற தொடர் விபத்துக்கள் நிகழ்கின்றன.
இதுவரையில், 44 முறை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் விமான நிலைய ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலைய மருத்துவமனை மற்றும் உணவு விடுதி ஊழியர் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், 45வது முறையாக நேற்று பிற்பகல் 4.30 மணிக்கு விபத்து நடந்தது. உள்நாட்டு முனையத்தில் பயணிகள் வருகை பகுதியில் இரண்டாவது வாசல் அருகே பயணிகள் பயன்படுத்தும் டிராலிகளை தள்ளி செல்வதற்காக தனி வாசல் ஒன்று உள்ளது. அந்த வாசலில் அமைக்கப்பட்டிருந்த 6 அடி உயரம், 4 அடி அகலம் உடைய கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது.
அந்த நேரத்தில், அந்த வழியாக சென்று கொண்டிருந்த விமான நிலைய ஒப்பந்த பணியாளர் முருகன் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, காயம் அடைந்த ஊழியருக்கு விமான நிலைய மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவல்அறிந்து, விமான நிலைய உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து எப்படி நடந்தது என விசாரித்தனர். நொறுங்கிய கண்ணாடி இடிபாடுகளை விமான நிலைய ஊழியர்களை வைத்து அவசர, அவசரமாக அகற்றினர்.
கொஞ்ச நாட்களாக எந்த விபத்தும் இல்லையே என்று பயணிகள் ஆசுவாசப்பட்ட நிலையில் இந்த விபத்து நடைபெற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications