சதத்தை நோக்கி...61-வது முறையாக உடைந்து விழுந்த சென்னை விமான நிலைய கண்ணாடி !
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைந்து விழுவது தொடர் கதையாகி உள்ளது. இன்று காலை பயணிகள் புறப்பாடு பகுதியில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை நடத்தும் அறை அருகில் உள்ள கண்ணாடி சுவர் பயங்கர சத்ததத்துடன் உடைந்து விழுந்தது.

இதனால் அங்கிருந்த பயணிகள் பயந்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுவரை 60 முறை கண்ணாடி விழுந்து உள்ளன. இந்நிலையில் இரவு விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் மீண்டும் கண்ணாடி உடைந்து விழுந்தது.
அந்த நேரத்தில் பயணிகள் யாரும் அருகில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை. 61-வது முறையாக விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்திருப்பது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விமான நிலையங்களில் 3 ஆவது மிக பரபரப்பான விமான நிலையமாக உள்ள சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் குறித்து பல முறை பயணிகள் புகார் தெரிவித்தபோதும் இதுவரை அது குறித்து எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என பயணிகள் குமுறுகின்றனர். இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications