நாளை முதல் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு சென்னையில் தடை!
சென்னை: சென்னையில் நாளை முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
40 மைக்ரான்களுக்கும் குறைவான பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மீறி பயன்படுத்துவோர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

காகித பைகளை பயன்படுத்துங்கள்:
பொதுமக்கள் துணிப்பைகள் அல்லது காகித பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடுமையான தண்டனைகள் உண்டு:
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 40 மைக்ரான்ஸ்க்கு குறைவாக அளவுள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களுக்கு எதிரான இந்தத் தடை அமல்படுத்தப்பட உள்ளது. மீறுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள் முதலிடத்தில்:
சென்னையில் பெரும்பாலும் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட்ஸ், திருமண விழாக்களில்தான் அதிகளவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு நாளொன்றுக்கு 429 டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்கின்றன.

5000 டன் கழிவுகள் உற்பத்தி:
ஒவ்வொரு நாளும் சென்னை 5,000 டன் கழிவுகளை ஏற்படுத்துகின்றது. 476 மாசு நிறைந்த நகரங்களில் 61வது இடத்தில் சென்னை உள்ளது.

டெல்லிக்கு அடுத்த இடம்:
டெல்லிக்கு அடுத்தபடியாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் உள்ள நகரமாக சென்னை உள்ளது. இதனை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடைமுறைக்கு ஒத்துவராது:
இதனால் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்தான் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ஜி.சங்கரன் முழுமையான பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

திசை திருப்பும் முயற்சி இது:
"இது மக்களை மற்ற விவகாரங்களில் இருந்து திசை திருப்புகின்ற முயற்சி" என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 10,000 பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் உள்ளனர். அந்த தொழிற்சாலைகளை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications