282 கிலோ நமோ மீன்கள் – மெரினாவில் வைத்து ப்ரீயாக கொடுத்த பாஜகவினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அதனை முன்னிட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பாஜகவினர் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அந்த அடிப்படையில், பிரதமராக மோடி பதவியேற்றதை முன்னிட்டு சென்னையில் பொதுமக்களுக்கு நமோ என்ற பெயரில் இலவச மீன்கள் வழங்கப்பட்டன.

Chennai BJP issues free fishes to 282 members…

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதையொட்டி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனால், தமிழக பாஜக மீனவர் அணி சார்பில் பொது மக்களுக்கு நமோ மீன்கள் என்ற பெயரில் இலவசமாக மீன்கள் வழங்கும் விழா, மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் அருகில் நடந்தது.

மேலும், இந்த தேர்தலில் பாஜக தனித்து 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதை நினைவுப்படுத்தும் வகையில், மோடியின் படம் பொறிக்கப்பட்ட பைகளில் தலா 1 கிலோ வீதம் 282 பேருக்கு சங்கரா, பாரை, கோலா உள்ளிட்ட மீன்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+