தீவிரவாதத்தை ஒடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை: தா.பாண்டியன் வலியுறுத்தல்
சென்னை: பயங்கரவாதத்தை ஜாதி, மதம் பார்க்காமல் தடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னைக்கு வந்த துரித ரயில் வண்டியில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்து 22 வயது பெண் சுவாதி என்பவர் உயிரிழந்துள்ளதும், மேலும் 14 பேர் காயம் பட்டுள்ளதும் மிகுந்த வேதனையைத் தரும் கொடுஞ் செய்தியாகும்.
பயங்கரவாதம், ஈவு இரக்கமற்ற, கண்ணற்ற மூர்க்கர்களால், முரடர்களால் முட்டாள்தனமாகச் செய்யப்படும் மனிதகுல விரோதக் கொடுஞ்செயலாகும்.
பயங்கரவாதக் குழுக்கள் பொதுமக்கள் கூடுகிற இடங்களில் தாக்குதலை நடத்துகிறார்கள். இத்தகைய குழுக்கள் என்ன காரணங்களைக்கூறி இந்தக் கொடுஞ் செயலில் ஈடுப்படாலும், அது ஏற்கத்தக்க போர் முறை அல்ல.
வெறிபிடித்த இத்தகைய கொலைக் கூட்டத்தைத் தடுப்பதில் காவல்துறை இன்னும் அதிகக்கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களும் விவரங்கள் கிடைப்பதைத் தந்து உதவ வேண்டும் இது பொதுக்கடமையாகும். இது முளையில் கிள்ளப்பட வேண்டும்.
உயிரிழந்த குடும்பத்திற்கு ஒரு லட்சம் என அறிவித்து இருப்பதை மாற்றி பத்து லட்சம் வழங்க வேண்டும். காயம்பட்டோருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுப்பதுடன் ஒரு லட்சம் வீதம் கொடுத்து மன அமைதிபெற உதவ வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கின்றது.
பயங்காரவாதம் வளர்ந்து விடாமல் தடுக்க, சாதி, மத, கட்சி வேறுபாடு பாராது அனைவரும், பயங்கரவாதப் போக்கைத் தடுத்து, மக்களைக்காக்க உதவிடவும் வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications