குண்டுவெடித்ததால் அலறி ஓடிவிட்டு பையை எடுக்க திரும்ப வந்தவர் 'சந்தேகநபராக' சிக்கிய பரிதாபம்!
சென்னை: இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை போலீசார் மடக்கிய நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அப்பாவி என்பதால் விடுவிக்கப்பட்டார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.25 மணிக்கு இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் சுவாதி என்ற இளம் பெண் உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து பெட்டிகளும் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டது. அப்போது குண்டுவெடித்த ரயிலின் பெட்டி ஒன்றில் நின்று கொண்டிருந்த நபரை போலீசார் மடக்கினர்.

அவருக்கும் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மருந்து நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறவர் என்றும் குண்டுவெடித்த உடன் அலறி அடித்து வெளியே தாம் ஓடியதாகவும் அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து தமது உடைமைகளை எடுக்க வந்ததாகவும் கூறியிருக்கிறார்.
அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவருக்கும் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று கூறி போலீசார் விடுவித்துவிட்டனர்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications