தண்ணீர்... தண்ணீர்... குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் சென்னை!
சென்னை: குடிநீருக்கு குடத்தை எடுத்துக்கொண்டு அலையும் நிலைக்கு வந்து விட்டனர் சென்னைவாசிகள். தினந்தோறும் பலகுடம் தண்ணீர் வந்த நிலை மாறி ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இன்றோ நான்கு நாட்களுக்கு ஒருமுறை கூட தண்ணீர் வருவது கூட அரிதாகிவிட்டது சென்னை மாநகரில். மயிலாப்பூர், மந்தைவெளி என பிரதான பகுதிகளின் நிலையே இப்படி என்றால், கொரட்டூர், கொளத்தூர் பகுதிகளின் நிலையை கேட்கவே வேண்டாம் லாரி குடிநீர் கூட அங்கே கிடைப்பதில்லை என்பதுதான் சோகம்.
இப்போதெல்லாம் சென்னைவாசிகளின் விசாரணையே இன்னைக்கு தண்ணி வருமா? என்பதாகத்தான் இருக்கிறது. அந்த அளவிற்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
சென்னை நகரின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துவிட்டது. பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் என சென்னைக்கு குடிநீர் வழக்கும் ஏரிகளின் குடிநீர் இருப்பு குறையத்தொடங்கிவிட்டதன் காரணமாகவே கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.

சென்னையும் குடிநீர் பஞ்சமும்
சென்னை மாநகரம் 1947, 1954, 1968, 1972 முதல் 1975 வரை, 1982, 1983, 2000 முதல் 2003 ஆகிய ஆண்டுகளில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. இதற்கு முழுமையான தீர்வு காண வேண்டும் என்பதற்காகத்தான் தெலுங்கு-கங்கை திட்ட (கிருஷ்ணா நதி நீர் திட்டம்) ஒப்பந்தம் போடப்பட்டது.

வீராணம் ஏரி தண்ணீர்
மேலும் வீராணம் ஏரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் பெறும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. ஆனால், மக்கள் தொகைப் பெருக்கம், உள்கட்டுமானப் பரப்பு அதிகரிப்பு மற்றும் போதிய மழையின்மை காரணமாக சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

ஏரிகளின் நீர் இருப்பு
பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தற்போது குறைவாகவே உள்ளது. சென்னையின் நீர்த் தேவை நாளொன்றுக்கு 90 கோடி முதல் 100 கோடி லிட்டர் வரையாகும். ஆனால், குடிநீர் வாரியம் சுமார் 55 கோடி லிட்டர் மட்டுமே வழங்குகிறது.

கடல்நீரில் இருந்து குடிநீர்
இதில், நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களின் மூலம் கிடைக்கும் 20 கோடி லிட்டரும், வீராணத்தில் இருந்து வரும் 18 கோடி லிட்டரும் அடங்கும். மீதமுள்ள தேவைக்கு நிலத்தடி நீரையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

எப்போது கிடைக்கும்
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 20 கோடி லிட்டர் நீர் எந்த காலத்திலும் கிடைக்கும்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக 2 திட்டங்களுக்கான கருத்துருக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன

கிருஷ்ணா நீர் வரலையே
கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 15 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு ஆந்திரம் தரவேண்டும். இதுவரை ஒரு ஆண்டுகூட முழு அளவு நீர் கிடைக்கவில்லை. 2011ம் ஆண்டு கிடைத்த 8.2 டிஎம்சிதான் அதிகபட்சமாகும். கடந்த மார்ச் 21ம் தேதி வரை 1.3 டிஎம்சி மட்டுமே திறந்துவிடப்பட்டது. அம்மாநில நீர்த் தேக்கங்களிலும் நீரின் அளவு குறைந்து வருவது முக்கியக் காரணம்.

பொய்த பருவமழை
தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்தது ஒரு காரணம் என்றாலும், நீர் மேலாண்மையிலும் நீர் நிலை பராமரிப்பிலும் கவனம் செலுத்தாததும் முக்கியக் காரணம் என்கின்றனர் நிபுணர்கள். எனவேதான் மீஞ்சூர், நெம்மேலி கடல் சுத்திகரிப்பு நீர், வீராணம் நீர், திருவள்ளூர் விவசாய கிணற்று நீர் ஆகியவை மூலம் தற்போது குடிநீர் சீரற்ற முறையிலேயே விநியோகம் செய்யப்படுகிறது.

பாதி கூட வரலையே
சென்னை நகரின் குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 100 கோடி லிட்டர் ஆகும். ஆனால், 55 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே தான் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் 3 நாளைக்கு ஒருமுறைதான் கிடைக்கிறது.

தெருகுழாய்களில் தகராறு
வீட்டிற்கு வீடு தண்ணீர் வந்த நிலை மாறி தற்போது தெருக்களில் ஏதோ ஒரு இடத்தில் மட்டுமே தண்ணீர் வருவதால் மக்கள் வரிசையில் காத்திருந்து தண்ணீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஆள் ஆளுக்கு 10 குடம் வரை வைத்துள்ளதால் வாய்தகராறும் ஏற்படுகிறது.

அலட்சிய பதில்
தண்ணீர் எப்போது வரும் என்று குடிநீர் வடிகால் வாரியத்தில் போன் செய்தால் அலட்சிய பதிலே கிடைக்கிறது. மின்சார பற்றாக்குறை என்று ஒருமுறையும், ப்ரசர் ஏறவில்லை என்றும் பதில் கூறுகின்றனர் அதிகாரிகள்.

வடகிழக்குப் பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 2 மாத காலம் இருப்பதால், அதுவரையில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு தண்ணீர்
அந்த வகையில், தண்ணீர் பஞ்சம் மிக கடுமையாக ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்கு ஏதுவாக ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றின் அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து ரயில் மூலம் சென்னை நகருக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு தேவையான ஆயத்த பணியில் தயாராக இருக்கும்படி சென்னை குடிநீர் வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரயில்களில் தண்ணீர்
ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றின் அருகில் உள்ள திறந்த ஆழ்துளை கிணறுகளில் இருந்து அன்றாடம் 12 லட்சம் முதல் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டேங்கர் மூலம் தண்ணீர்
கடந்த 2001ம் ஆண்டு ஈரோட்டில் இருந்து சென்னை நகருக்கு தண்ணீர் கொண்டு வர 22 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ‘கூட்ஸ்' டேங்கர் பயன்படுத்தப்பட்டது. தற்போது 45 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன் கூடிய டேங்கர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருணபகவான்
சரியான திட்டமிடுதல் இல்லாத காரணத்தால் சென்னை வாசிகள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு ஆளாகியுள்ளனர். வருணபகவான் மனது வைத்தால் மட்டுமே சென்னை நகரின் தண்ணீர் பிரச்சினை தீரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications