வெறும் 3 மணி நேரத்தில் சென்னை- கோவை.. வந்தே பாரத்தின் அடுத்த அப்டேட்.. எப்படி இருக்கும்?
சென்னை: மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை வந்தே பாரத் ரயில்கள், அதன் அனுமதிக்கப்பட்ட வேகம் என்று பார்த்தால் மணிக்கு 130 கிலே மீட்டர் வேகம் ஆகும். உண்மையில் 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டால் வெறும் 4 மணி நேரத்தில், சென்னையில் இருந்து கோவைக்கு போய்விட முடியும் என்கிறார்கள். ஆனால் அந்த வேகத்தில் கூட இயக்கப்படாததற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
நாட்டின் அதிவேக ரயில்கள் என்றால், அது வந்தே பாரத் ரயில்கள் தான். சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையே ரயில் பயண நேரத்தை குறைக்கும் வகையில், வந்தே பாரத் அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. டெல்லி - காத்ரா, டெல்லி - வாரணாசி, குஜராத் காந்திநகர் - மும்பை, இமாச்சலப் பிரதேசம் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி, கர்நாடகாவின் மைசூரு - சென்னை உட்பட 7 வந்தே பாரத் ரயில்கள் கடந்த மாதம் வரை இயக்கப்பட்டன.
இந்நிலையில் 8வது வந்தே பாரத் அதிவேக ரயில், செகந்திராபாத் (ஐதராபாத்) மற்றும் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து 9 ஆவது வந்தே பாரத் ரயில் செகந்திரபாத் மற்றும் திருப்பதி இடையே கடந்த ஏப்ரல் 8ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஏப்ரல் 8ம் தேதியே மாலையில் சென்னை கோவை வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சென்னை கோவை இடையே இயங்கும் இந்த ரயில் நாட்டின் 10வது வந்தே பாரத் ரயில் ஆகும். வந்தே பாரத் ரயில்கள் உண்மையில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டால் சென்னையில் இருந்து கோவைக்கோ, அல்லது மதுரைக்கோ பயண நேரம் கிட்டத்தட்ட விமானத்தை பிடித்து, போர்டிங்கிற்கு வெயிட் செய்து போகும் நேரத்தைவிட குறைவாகவே இருக்கும். அதாவது வெறும் 3 மணி நேரத்தில் போய்விட முடியும்.

ஏன் அரசு அனுமதித்த 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் கூட 4 மணி நேரத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கோ அல்லது கோவைக்கோ சென்றுவிட முடியும்.வெறும் சென்னை, கோவை வந்தே பாரத் ரயில் மட்டுமல்ல, நாட்டின் பெருநகரங்களில் இயக்கப்படும் வந்தே ரயில்கள் 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கினால், மிகப்பெரிய பலன் மக்களுக்கு கிடைக்கும். ஆனால் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டாலும் சராரியாக கடந்த 2 ஆண்டுகளாக வந்தே பாரத் ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 83 கி.மீ. ஆக உள்ளது. இதற்கு தண்டவாளத்தின் மோசமான நிலைதான் காரணம் என்கிறார்கள். டெல்லி-வாரணாசி வந்தே பாரத் ரெயில் மட்டும் 95 கி.மீ. சராசரி வேகத்தை எட்டி இருக்கிறது என்கிறார்கள்.
தண்டாவாளத்தின் அடிப்படை கட்டமைப்புகளை பலமாக மாற்றினால் தான் நமக்கு பெரிய பலன் கிடைக்கும். இப்போது உள்ள கட்டமைப்பில் மிக அதிகவேகமாக ரயில்களை இயக்க முடியாது என்றே சொல்கிறார்கள். இதனிடையே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது,. இந்த 400 ஆற்றல் திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்களில் 100 ரயில்கள் 'டில்டிங் ரயில்' தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படவுள்ளதாக சொல்கிறார்கள். டில்டிங் ரயில் என்பது சாதாரண ரயில் பாதைகளில் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் தொழில்நுட்பம் கொண்ட ஒரு ரயில் ஆகும். வளைந்து செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போல், வளைவுகள் கொண்ட ரயில் பாதையிலும் அதிக வேகத்தில் ரயில்களை இயக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என்கிறார்கள்.இந்த 'டில்டிங் ரயில்'கள் இயக்கப்படும் போது ரயிலின் வேகம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்கிறார்கள்.

இத்தகைய ரயில்கள் இப்போது இத்தாலி, போர்ச்சுகல், ஸ்லோவேனியா, பின்லாந்து, ரஷ்யா, செக் குடியரசு, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, சீனா, ஜெர்மனி மற்றும் ருமேனியா ஆகிய 11 நாடுகளில் இயக்கப்படுகின்றன. ள் 2025 -26ம் ஆண்டு 100 டில்டிங் ரயில்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இந்த ரயில்கள் வந்த பின்னர் தற்போது உள்ள தண்டாவள கட்டமைப்பிலேயே ரயில்களை அதிவேகத்தில் இயக்க முடியும் என்றும் கூறுகிறார்கள்.
தற்போதுள்ள அனைத்து அதிவேக ரயில்களான ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட அனைத்து அதிவேக ரயில்களையும் படிப்படியாக மாற்றியமைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 160 கிமீ வேகத்தில் இருந்து அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications