சென்னை கேகே நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்திக்கொலை
சென்னை கே கே நகரில் கல்லூரி வாசலில் மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னை கேகே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் படித்து வந்த மாணவியை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தினார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவியின் பெயர் அஸ்வினி என்பதாகும். மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இன்று மதியம் கல்லூரி முடிந்து தோழிகளுடன் வெளியே வந்தார்.
அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் மாணவி அஸ்வினியை மறித்து பேசினார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.

மாணவியை குத்திய மர்மநபர்
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அஸ்வினி மீது சராமாரியாக குத்தினான். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த மாணவி அஸ்வினி ரத்த வெள்ளத்தில் கிழே சாய்ந்தார். இந்த காட்சியை நேரில் கண்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இளைஞருக்கு அடி உதை
எனினும் மாணவியை கொன்று விட்டு தப்ப முயன்ற அந்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விரட்டிய இளைஞர்
முதற்கட்ட விசாரணையில் மாணவியை குத்தியவன் பெயர் அழகேசன் என்று தெரியவந்துள்ளது. அஸ்வினியை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளான். ஏற்கனவே மதுரவாயல் காவல்நிலையத்தில் அஸ்வினி புகார் அளித்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

அஸ்வினி மரணம்
இதனிடையே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸ்வினி சிசிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். பட்டப்பகலிலே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் மாணவி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீனாட்சி கல்லூரி வாசலில் பதற்றம் அதிகரித்துள்ளது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒருதலைக்காதலால் அஸ்வினியை அழகேசன் கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications